Author Topic: ~ சில்லி சோயா : ~  (Read 333 times)

Offline MysteRy

~ சில்லி சோயா : ~
« on: July 29, 2015, 11:49:35 AM »
சில்லி சோயா :



தேவையான பொருட்கள்:

சோயா உருண்டைகள், சில்லி சாஸ், மக்காச்சோள மாவு, மைதாமாவு, அரிசி மாவு, உப்பு ருசிக்கேற்ப, வினிகர் _ 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.

அரைத்துக் கொள்ளவும்:

பூண்டு _ 8 பல்லு, இஞ்சி _ 1 அங்குலத்துண்டு, பச்சைமிளகாய் _ 2.

செய்முறை:

செய்முறை : பிரஜர்பேனில் தண்ணீர்விட்டு சூடாக்கவும். கொதி வரும்போது சோயா உருண்டைகள் சேர்த்து மூடியால் மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து வடிகட்டவும். சோயாவை நன்கு பிழிந்து எடுத்து குளிர்ந்த நீரில் போடவும். மறுபடியும் பிழிந்து எடுத்து தனியே வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை நைசாக அரைத்து அதோடு சிறிது உப்பு, வினிகர், சில்லி சாஸ் கலந்து சோயாவின் மீது தெளித்து கைகளால் கலந்துவிடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் முக்கால் மணிநேரம் வைத்துவிடவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து கைகளால் பிசறிவிட்டு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் கொள்ளும்வரை போடுங்கள். நன்கு கரகரப்பாக பொரித்து எடுத்து சூடாக தக்காளி சாஸ§டன் சாப்பிட்டால் படு டேஸ்டியாக இருக்கும்!