Author Topic: கொல்லிமலை ரகசியம்  (Read 1851 times)

Offline Global Angel

கொல்லிமலை ரகசியம்
« on: December 25, 2011, 10:59:51 PM »
கொல்லிமலை ரகசியம்
இசங்கு
            இரசாயனம் சாராமலும் மாசு இல்லாமலும் இயற்கையாக வளரும் மூலிகைகள் இன்று மலைப் பிரதேசங்களிலே கிடைக்கின்றன.  மனித வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டுக் காகவும் காடுகளை அழித்தோம்.  நகரங்களை உருவாக்கினோம்.  மேலும் சுக வாழ்வை பெற மலைவாழ் ஸ்தலங்களை தேடிச் சென்றோம்.  அங்கு இயற்கை பொக்கிஷங்கள் ஏராளம்.  ஆனால் இன்றோ காடுகளை அழித்து, மலைகளை குடைகின்றோம். போதாக்குறைக்கு அடுக்குமாடி விடுதிகளை அமைத்து சுற்றுலா என்ற பெயரில் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே காடுகளை அழித்ததால் இயற்கையின் சீற்றம் ஒருபுறம் வறட்சியாகவும், புயலாகவும் தாக்குகின்றன.  இயற்கையை இழந்ததன் பயன் மூலிகைகளை தேடி அலையும் நிலையாகிவிட்டது.  மலைகளில் கிடைக்கும் சில அபூர்வ மூலிகைகள் சில இடங்களில் வளர்கின்றன.  அந்த மலைகளுள் கொல்லி மலையும் ஒன்று.  கொல்லிமலையின் தட்ப வெப்பமும், மண்வளமும், மூலிகை வளர ஏதுவாகின்றன.  இங்குள்ள மூலிகைகளின் மருத்துவப் பயன்கள் அதிக வீரியம் கொண்டவையாக உள்ளன.  கடந்த இதழில் இண்டு பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் இசங்கு பற்றி அறிந்து கொள்வோம். 

மணல் பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் இசங்கு நன்கு வளரும் தன்மை கொண்டது.  இந்தியாவிலும் இலங்கையிலும் இவை அதிகம் காணப்படுகின்றது.  இது குண்டலி, கோல், சங்கங்குப்பி, முத்தாபலம், மீச்செங்கன், பீனாசெங்கம் குப்பி என அழைக்கப்படுகின்றன.

Tamil                 - Isangu
English              - Garden quinine
Malayalam        - Nir-notijil
Telugu               - Pishinika
Sanskrit             - Khudra agnimanta
Botanical Name - Clerodendrum inerme

கரப்பான் கிரந்தி கருங்குட்ட ரோகம்
உரப்பான் மேகம் ஒழியுங் - கருவாம்
கருங்கிரந்தி செவ்வாப்புக் கட்டிகளு மேகும்
அருஞ்சங்கங் குப்பிக் கறி
வெட்டை சொறி சிரங்கு வீறி வருஞ்சூலை
துட்டவா தங்க பந்து ணுக்கிரும -கெட்டவிடம்
அங்கங்கொள் பூச்சிவை யாவும் போம் பித்தமுறுஞ்
சங்கங்குப் பிக்கெனவே சாற்று   
                                                              (அகத்தியர் குணபாடம்)

மெலிந்த தேகம் தேற

சிலர் நோயினால் அவதிப்பட்டு உடல் இளைத்து மிகவும் மெலிந்து காணப்படுவார்கள்.  இவர்கள் இதன் இலையை எடுத்து நன்கு நீரில் அலசி கசக்கி சாறு எடுத்து அல்லது பச்சை வேரை இடித்து சாறு எடுத்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் மெலிந்த உடல் தேறும்.

காய்ச்சல் குணமாக

தற்போது மழைக்காலம் ஆரம்பிக்கும் நேரம்.  அங்கங்கு தண்ணீர் தேங்குவதால் மலேரியா, டைபாய்டு, கடுங்காய்ச்சல், குளிர்சுரம் ஏற்பட வாய்ப்புண்டு.  இவர்கள் இசங்கு இலையை அரைத்து சாறு எடுத்து அதனுடன் வெந்நீர் அல்லது தேன் கலந்து குடித்து வந்தால் கடுஞ்சுரமும் மற்றும் விட்டு வரும் சுரமும் குறையும்.

சொறி சிரங்கு மாற

தோலின் வெளிப்பகுதியில் சொறி, சிரங்கு புண் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் இசங்கு இலையைச் சாறு எடுத்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் ஓரளவு கலந்து நன்கு கொதிக்க வைத்து தினமும் காலையில் 5 மி.லி. அளவு சாப்பிட்டு வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.   இசங்கு இலையை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால் சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

குடற்புழுக்கள் நீங்க

இசங்கு இலையின் சாறுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து காய்ச்சி காலை மாலை 5 மி.லி. அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.

குழந்தைகளுக்கு

பிறந்த குழந்தையின் தோல் பகுதியில் சிவந்து கட்டி கட்டியாக காணப்படும். இதனை செவ்வாப்பு நோய் என்பர்.   இந்த நோய் தாக்குதலிலிருந்து விடுபட இசங்கே சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

இசங்கு வேரை எடுத்து எண்ணெயிலிட்டு காய்ச்சி வாயுப்பிடிப்பு உள்ள பகுதிகளுக்கு மேல் பூச்சாக பூசலாம்.  வாத நோய்க்கும் இது சிறந்த மருந்தாகும். 

இசங்கு வேரை உலர்த்தி பொடி செய்து எடுத்து 2 கிராம் வீதம் தேன் கலந்து கொடுத்து வந்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.  சொறி, சிரங்கு, சுரம் போன்றவை குணமாகும்.  வாத, பித்த கப நோய்களை குணப்படுத்தும் தன்மை இசங்குக்கு உண்டு
                    

Offline RemO

Re: கொல்லிமலை ரகசியம்
« Reply #1 on: December 28, 2011, 06:38:55 AM »
Ithu varai kelvi padatha peyar
intha mari ariya moolikaikal elam nama veetuku pakathileye irunthalum namaku theriya porathila
aangila murai maruththuvam nu vantha pinadi ivaikala nama payan paduththavum porathilaye

Offline Global Angel

Re: கொல்லிமலை ரகசியம்
« Reply #2 on: December 29, 2011, 05:54:58 AM »
நானும் இபோதான் கேள்வி படுகின்றேன்