Author Topic: ~ புளிக்குழம்பு ~  (Read 362 times)

Offline MysteRy

~ புளிக்குழம்பு ~
« on: July 15, 2015, 06:57:19 PM »
புளிக்குழம்பு



தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1/2 கப் (தோலுரித்தது) பூண்டு - 10 பல் (தோலுரித்தது) தக்காளி - 2 (நறுக்கியது) புளி - 1 எலுமிச்சை அளவு சாம்பார் பொடி - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் வடகம் - சிறிது சோம்பு - 1/4 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி!!