Author Topic: ~ முள்ளங்கி சாற்றின் பலன்கள்! ~  (Read 345 times)

Offline MysteRy

முள்ளங்கி சாற்றின் பலன்கள்!

முள்ளங்கி சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்படுகிறது. கழிவுகளை வெளியேற்றக்கூடியது. சிறுநீரகக் கற்களை கரையவைக்கும். கல் அடைப்பு, கால் வலி, அதிகாலை முக வீக்கம் போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து.  மாத்திரைகளைவிட 100 மடங்கு குணமாக்கும் திறன் முள்ளங்கிச் சாறுக்கு உண்டு. உடல் எடையைக்  குறைக்க நினைப்போருக்கு முள்ளங்கி சாறு  சிறந்த வாய்ப்பு. உடலில் அடிவயிறு, கை, கால் போன்ற இடங்களில் படியும் கொழுப்பைக் (Adipose tissue) கரைக்கும். கெட்ட கொழுப்பை முற்றிலுமாக நீக்கி, மீண்டும் கொழுப்புப் படியாமல் தடுக்கும்.



நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க்!

தேவையானவை:

அகத்திப் பூ - 5, முள்ளங்கி - 1, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

ஐந்து அகத்தி பூக்களைச் சுத்தம்செய்து, 200 மி.லி நீரில் போட்டு மூடிவைத்து, பாதியாகச் சுண்டவிட வேண்டும். இந்த டிகாக்‌ஷனை 50 மி.லி எடுத்து, அதனுடன் சம அளவு முள்ளங்கி சாறு கலந்து, 45 நாட்களுக்குக் குடித்துவந்தால், பாதித்த நுரையீரல் சரியாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அருந்தலாம்.