Author Topic: ~ பருப்பு & வெங்காயத்தாள்-முட்டை பொரியல் ~  (Read 405 times)

Offline MysteRy

பருப்பு & வெங்காயத்தாள்-முட்டை பொரியல்



தேவையான பொருட்கள்

வேகவைத்த பாசிப்பருப்பு (1/4 கப் பாசிப்பருப்பை தேவையான தண்ணீர் விட்டு குழைய வேகவைத்துக்கொள்ளவும்)
நறுக்கிய வெங்காயத்தாள்-1/2கப்
சீரகம்-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
வர மிளகாய்-3
பச்சைமிளகாய்-1
எண்ணெய்
உப்பு
நெய்-1டீஸ்பூன்

செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து, பச்சைமிளகாய்-வரமிளகாய் சேர்க்கவும். சில விநாடிகளின் பின்னர் நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து குறைந்த தீயில் ஓரிரு நிமிடம் வதக்கவும்.
வெந்து மசித்த பருப்பினைச் சேர்த்து ஒரு கொதி விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி நெய்யை மேலாகச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.