Author Topic: ~ வெந்தயக்கீரை புலாவ் ~  (Read 342 times)

Offline MysteRy

வெந்தயக்கீரை புலாவ்



தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த வெந்தயக் கீரை -1/2கப்
பாஸ்மதி அரிசி-1கப்
பச்சைப் பட்டாணி -1/4கப்
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சைமிளகாய் -2 (அ) 3 [காரத்திற்கேற்ப]
இஞ்சி- சிறுதுண்டு
பூண்டு-2பற்கள்
தேங்காய் துருவல்-1டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை- கொஞ்சம்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
நெய்-1டேபிள்ஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
பொடித்துக்கொள்ள
பட்டை-சிறு துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-1

செய்முறை

அரிசியை 2-3 முறை அலசி, 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கீரையை மண் போக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
பச்சைமிளகாயை நீளமாக கீறி வைக்கவும்.
இஞ்சியைப் பொடியாக நறுக்கியும், பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டியும் வைக்கவும்.
பட்டை கிராம்பு ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய்+நெய் காயவைத்து முந்திரி-திராட்சை சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை சேர்த்து வதக்கி, பட்டை-கிராம்பு-ஏலம் பொடியைச் சேர்த்து வதக்கவும்.
இதற்கிடையில் கீரையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் பட்டாணி மற்றும் வெந்தயக் கீரையைச் சேர்த்து சர்க்கரையையும் போட்டு வதக்கவும்.
கீரை வதங்கியதும் தக்காளி-தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும்.
பிறகு ஊறிய பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து 11/2கப் தண்ணீர் விடவும்.
குக்கரை மூடி மிதமான தீயில் 7 நிமிடங்கள் சமைக்கவும். அதற்குள் விசில் வந்துவிடும், வராவிட்டாலும் பாதகமில்லை, ஏழு நிமிடங்கள் கழித்து குக்கரை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். அரிசி ஊறி இருப்பதால் விரைவில் வெந்துவிடும். [இந்த முறை ஒரு கப் அரிசி அளவுக்கு...அரிசி அதிகம் சேர்த்தால் குக்கர் ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கவும்.]

குக்கரின் ப்ரெஷ்ஷர் முழுவதும் அடங்கிய பிறகு திறந்து சாதம் உடையாமல் கிளறிவிட்டு பரிமாறவும்.
இந்தப் புலாவ் அப்படியே சாப்பிடவும் அருமையாக இருக்கும். எனக்கு பச்சடி, சைட் டிஷ் எல்லாம் தேவையில்லாததால் செய்யவில்லை. உங்கள் விருப்பப்படி வெள்ளரி தயிர் பச்சடி, கேரட் தயிர் பச்சடி இவற்றுடன் சாப்பிடலா