Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சர்க்கரை நோய், உடல் எடை பிரச்னைக்கு விடை கொடுக்கும் கோதுமை ரவைப் பொங்கல் ! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சர்க்கரை நோய், உடல் எடை பிரச்னைக்கு விடை கொடுக்கும் கோதுமை ரவைப் பொங்கல் ! ~ (Read 434 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226858
Total likes: 29028
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சர்க்கரை நோய், உடல் எடை பிரச்னைக்கு விடை கொடுக்கும் கோதுமை ரவைப் பொங்கல் ! ~
«
on:
May 27, 2015, 09:48:21 PM »
சர்க்கரை நோய், உடல் எடை பிரச்னைக்கு விடை கொடுக்கும் கோதுமை ரவைப் பொங்கல் !
சர்க்கரை நோய், உடல் எடை பிரச்னைக்கு விடை கொடுக்கும் கோதுமை ரவைப் பொங்கல்
கோதுமை ரவையில், குறைந்த அளவே கலோரி இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளும் தினமும், இதில் பொங்கல் அல்லது கிச்சடியாக செய்து சாப்பிடலாம். முழு கோதுமையை அரைத்து உடைத்து செய்தால், நார்ச்சத்து கிடைக்கும்.
மேலும், பொங்கலுக்கு பச்சைப் பயறு சேர்ப்போம். இதனால், புரதச்சத்தும் சேரும். கொத்தமல்லி, கறிவேப்பிலை அரைத்து பொங்கலில் சேர்த்தால் இரும்பு சத்தும் கிடைத்துவிடும். குடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும். நல்ல பசியைத் தூண்டும்.
கோதுமை ரவை பொங்கல் எப்படி செய்வது?
தேவை:
கோதுமை ரவை - 250 கிராம், பச்சைப்பயறு - 100 கிராம், வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உடைத்த மிளகு, சீரகம், அரைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி விழுது - தலா ஒரு ஸ்பூன், தவிட்டு எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை ரவையையும், பச்சைப் பயறையும் வாசனை வரும் வரை வறுத்து, பிறகுலேசாக ஊற வைத்து உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மிளகு, சீரகத்தைப் போட்டு பொரிந்ததும், வேர்க்கடலை சேர்த்து இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
இதனை வேக வைத்துள்ள கோதுமை, பச்சைப்பயறு கலவையில் சேர்த்து நன்றாகக் கிளறவும். இதற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி அமர்க்களமாக இருக்கும்.
புதினா சட்னி:
புதினா இலைகளை கழுவி, வதக்கவும். சிறிது எண்ணெயில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக் கவும். இதனுடன் வதக்கிய புதினா, சிறிது புளி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும். புதினா சட்னி ரெடி
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சர்க்கரை நோய், உடல் எடை பிரச்னைக்கு விடை கொடுக்கும் கோதுமை ரவைப் பொங்கல் ! ~