ஏஞ்செல் நீங்கள் கூறுவது போல ஆதி காலத்தில் இருந்த ஜோதிடங்களை நான் ஏற்று கொள்கிறேன் அதை எந்த அடிப்படையில் நான் ஏற்று கொளிகிறேன் என்றால் சில ஆய்வுகளை செய்த பிறகே ஏற்று கொள்கிறேன்.
நான் எந்த ஒரு செயலையும் இறுதி வேதம் இறைமறை குரானின் மூலமாக உரசி பார்க்க கூடியவன் அதன் படி இந்த சொதிடத்தையும் உரசி பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதை விளக்காமாக தர விரும்புகிறேன்.
அதாவது அதி காலத்தில் ஜோதிடம் உண்மையாக இருந்தது இதற்க்கு காரணம் மனிதர்களின் மறைவான ஞானம் என்பது கிடையாது. மாறாக வானுலகில் வானவர்கள் பெசிகொல்பவைகளை ஓட்டுக்கேட்க கூடிய ஜின் இனங்கள் அந்த மறைவான செய்தியை குறி காரர்களிடமும், ஜோதிடர்களிடமும் சென்று சொல்ல கூடியவையாக இருந்தன என்பதை திருமறை குரான் விளக்குகிறது.
குறிப்பு:
ஜோதிடத்தை நம்பகூடிய நீங்கள் மனிதர்களுக்கு ஆற்றல இருக்கிறது என்று நம்ப கூடிய நீங்க இறைவனால் படைக்கப்பட்ட வானவர்கள், ஜின்களின் படைப்பை நம்புவீர்கள் என்று நம்புகிறேன். இறைவன அனைத்திற்கும் ஆற்றல் பெற்றவன்.
வானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையை பற்றி பேசும்போது, சிங்கள் வனத்தின் அருகே சென்று அந்து பேசுவதை ஒட்டு கேட்பவர்களாக இருந்தனர்.
வானுலகில் பேசப்படும் அனைத்து விடயங்களும் ஜின்களால் ஒட்டுகேட்க்க முடியவில்லை. மாறாக ஓரிரு விடயங்களை மட்டுமே ஒட்டு கேட்டு வந்தன. இதைதான் சிங்கள் குரிகாரர்களிடமும், ஜோதிடர்களிடமும் சொல்லி வந்தன.
இறைவனும் குறிப்பிட்ட காலம் வரை இதை தடுக்காமல் இருந்தான்.
திருக்குர்'ஆண் இறக்கியருள பட்ட பிறகு இவ்வாறு ஒட்டுகேட்ப்பதை விட்டும் முழுமையாக தடுக்கப்பட்டனர்.
இதோ இறை மறை குர்'ஆணின் வசனத்தில் ஆதாரம்!
“நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.
“(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான். (அல்-குர்'ஆண் 72:8,9,10)
இந்த வசனத்தில் இருந்து ஆதி காலத்தில் ஜோதிடர்கள் குரியது அவர்களின் மறைவான ஞானத்தில் அடிப்படையில் அல்ல ஜின்களின் உதவியால் என்பது என் ஆய்வின் முடிவு. அதும் இப்போது நிறுத்த பட்டு விட்டதால் இப்பொழுது ஜோதிடம் என்ற பெயரில் அலைபவர்களை பொய்யர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இதற்க்கு பொருத்தமாக ஒரு சில நபிமொழிகளை தர விரும்புகிறேன். நபி மொழி என்றால் அது நபி சொன்னது அல்ல மாறாக இறைவன் அறிவித்தைதான் நபி மக்களுக்கு சொல்வாரே அன்றி இறைத்தூதர்களுக்கேன்று மறைவான ஞானம் கிடையாது.
இதையும் அருள்மறை கூறுகிறது இதோ!
(இன்னும்) நீர் கூறுவீராக: “இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.” 27:65
இதை பற்றி இறைதூதர் கூறியவை!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(இறைக் கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தைவிட்டு பீதி அகற்றப்படும்போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், 'நம் இறைவன் என்ன சொன்னான்?' என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், '(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்' என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக்கேட்பவர்கள் செவியேற்றுவிடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்து கொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக் கேட்கின்றனர்.
சுஃப்யான்(ரஹ்) (தம் அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தம் வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள்.
அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தன் சகாவிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்துவிடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற்குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாக பூமிவரை அதைச் சேர்த்துவிடுகிறார்கள்.
சுஃப்யான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'கடைசியில் அது பூமிக்கு வந்துசேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகிறான். (இதைக் கேட்கும்) மக்கள், 'இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?' என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக்கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்' என்று இடம் பெற்றுள்ளது.
இதில் இருந்து பெறப்படும் தகவல் என்னவென்றால் அதி காலத்தில் ஜோதிடம் சொல்லியவர்கள் மறைவனத்தை அவர்கள் அறியவில்லை என்றும் அதை அவர்களுக்கு ஜின்க்லையே சொல்லியது என்பதையும் அறிந்து கொள்ளளால்.
அனால் இப்பொழுது அனைத்துமே தடுக்கப்பட்டுள்ளது ஆகவே இப்பொழுது ஜோதிடம் கூறும் ஜோதிடர்களால் மறைவனத்தை அறிந்து கொள்ள இயலாது. அவர்கள் ஏமாற்று பேர்வழிகள் தான் என்பது உறுதியாகிறது.
ஏஞ்செல் நீங்கள் கூறியது போல ஆதிகாலத்தில் ஜோதிடர்கள் கூறியது உண்மையாக இருந்த காரணம் ஜின்கள் அவர்களுக்கு உதவி செய்தது தானே தவிர அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது என்பது எனது ஆய்வின் முடிவு.