Author Topic: ~ சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவு குறித்து பெட்டகம் சிந்தனை!! ~  (Read 642 times)

Offline MysteRy

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவு குறித்து பெட்டகம் சிந்தனை!!

இப்படி ஒரு தலைவர் இந்தியாவுக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைத்த ஆட்சியாளர். அவருக்கும் தமிழர்களுக்கும் பூர்வகாலத் தொடர்பு இறுக்கமாக இருந்தது என்பதே அவரது மறைவின்போது ஏங்கவைத்தது.



1960-களின் மத்தியில் அன்றைய தி.மு.க தலைவர் அண்ணா, சிங்கப்பூர் போயிருந்தார். அவருக்கு, அங்கு நல்லதோர் வரவேற்பு தரப்பட்டது. இந்தியாவில் இருந்து சென்றிருந்த ஏராளமான தமிழர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், 'இதனையே உங்களது சொந்த நாட்டைப்போலக் கருதி தமிழர்கள் வாழ வேண்டும். இந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமாக நீங்கள் நடந்துகொள்ளக் கூடாது’ என்ற பொருளில் அறிவுரைகள் சொன்னார். அப்போது லீ குவான் யூ ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார். 'தமிழர்களுக்கு இலங்கையிலும், பர்மாவிலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நான் அறிவேன். ஆனால் மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ எந்தக் கசப்பும் ஏற்படாமல் நான் தடுப்பேன்’ என்று தமிழர்கள் மீது கரிசனமாக நடந்துகொண்டவர் அவர்.

ஈழத்தில் 2009-ம் ஆண்டு நயவஞ்சகப் படுகொலைகள் நடத்தப்பட்டபோது எல்லா நாடுகளும் வாய்மூடி மெளனம் சாதித்தன. அப்போது, 'இலங்கை ஒரு மகிழ்ச்சிக்குரிய நாடாக இருக்க வாய்ப்பு இல்லை. இலங்கையில் சிங்களவர்கள் இருந்த காலம் முதல் தமிழர்களும் அங்கு வாழ்கிறார்கள். அந்த நிலம் இரண்டு இனத்துக்கும் சொந்தமானது. சிங்களவர்களின் தாக்குதலுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே’ என்று கம்பீரமாகச் சொன்னவர் லீ குவான் யூ. அதனால்தான் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லீ குவான் யூவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.