Author Topic: ஒரு இதயத்தின் புலம்பல்  (Read 414 times)

Offline thamilan

ஒரு இதயத்தின் புலம்பல்
« on: February 20, 2015, 01:05:31 PM »
மண் பார்த்து நடக்கும் என்னை
கண் பார்த்து
ஆயிரம் கவிதை புனைய வைத்தவளே

என் நினைவின் நிழலாய் இருந்து
என் கனவிலும் தொடர்ந்தவளே
மறப்பதற்கும் மன்னிப்பதற்ற்கும்
மாற்றுவதற்கும்
காதல் என்ன
தேர்தல் கூட்டணி என்றா நினைத்தாய்

உன் நினைவுகளை பதிந்த
இதயத்தில்
இன்னொரு பெயரை பதிவு செய்ய
என் இதயம் ஒன்றும்
ஒலிநாடா அல்ல

உயிரில் இணைந்து
உதிரத்தில் கலந்தது
உணர்வில் ஒன்றானது தான்
காதல் என்பதை அறியாதவளே

ஏட்டில் எழுதிருந்தால்
அழித்து விடலாம்  உன்னை
இதயத்தில் அல்லவா எழுதிவிட்டேன்

கோள்கள் சுற்ற மறந்தாலும்
உன் தெருவில் என் கால்கள்
சுற்ற மறந்ததிலையே
இன்று நான் உன் நினைவில்
வேற்றுக்கிரகவாசி
« Last Edit: February 20, 2015, 01:23:10 PM by thamilan »