Author Topic: ~ சமையல்....டிப்ஸ் ~  (Read 863 times)

Offline MysteRy

~ சமையல்....டிப்ஸ் ~
« on: February 02, 2015, 08:36:18 PM »


கத்திரிக்காய், வாழைக்காய் போன்ற காய்கள் நறுக்கியதுமே கறுத்துவிடும். இதைத் தவிர்க்க, தண்ணீரில் ஒரு கரண்டி பாலை ஊற்றி, அதில் கறிகாய்த் துண்டுகளைப் போட்டால், காய்கள் சமைக்கும் வரை நிறம் மங்காமல் இருக்கும்.

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #1 on: February 02, 2015, 08:37:03 PM »


பாயசத்துக்கு பால் குறைவாக இருந்தால், ஒரு டேபிள்ஸ்பூன் ஹார்லிக்ஸை வெந்நீரில் கட்டி இல்லாமல் கரைத்து, சேர்த்து விடுங்கள். பாயசம் நிறமாகவும் சுவையாகவும் இருக்கும்.

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #2 on: February 02, 2015, 08:37:50 PM »


குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால்...  வாணலியில் ஊற்றி, ஒரு டம்ளர் காய்ச்சின பாலை  சேர்க்கவும், பிறகு,  கரண்டியால் நன்கு கலக்கிவிட்டால், காரம் வெகுவாகக் குறைந்திருக்கும்.

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #3 on: February 02, 2015, 08:38:34 PM »


உங்கள் வீட்டுத் தோட்டத்துச் செடிகளில் பூச்சித் தொல்லையா? வேப்பிலைகளை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து, மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, செடிகளின் மீது தெளியுங்கள். ஒரு சில நாட்களில் பூச்சிகள் ஒழிந்து போய்விட்டிருக்கும்

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #4 on: February 02, 2015, 08:39:20 PM »


இரண்டு மூன்று உருளைக்கிழங்குகளை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவு அல்லது கடலை மாவு சேர்த்து, தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டினால், சுவை அருமையாக இருக்கும் (வடை நடுவில் துளையிட வேண்டாம்). விருப்பப்பட்டால், பிரெட் துண்டுகளுக்கு நடுவில் வடைகளை வைத்து வடா பாவ் என்று பரிமாறலாம்.

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #5 on: February 02, 2015, 08:40:03 PM »


அவ்வப்போது ஃபிரெஷ் ஷாக, வீட்டிலேயே கொஞ்ச மாக ரவா லட்டு செய்ய ஒரு யோசனை... நாலு டேபிள்ஸ்பூன் ரவையை வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். சற்று ஆறியதும் மிக்ஸியில் நைஸாக பொடித்துக்கொள்ளுங்கள். அதே மிக்ஸி ஜாரில் நாலு டேபிள்ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்து அரையுங்கள். ஏலக் காய்த்தூள் கலந்து, உருக்கிய நெய்விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடியுங்கள். நினைத்தபோதெல்லாம் பத்தே நிமிடங்களில் ரவா லட்டு செய்துவிடலாம்.

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #6 on: February 02, 2015, 08:41:10 PM »


தலையில் நீர் கோத்து ஏற்படும் தலைவலிக்கு சுக்கு, பெருங்காயத்தை பால் விட்டு உரசி நெற்றியில் பற்று போட்டால் தலைவலி சட்டென மறையும்.

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #7 on: February 02, 2015, 08:41:54 PM »


கண்ணாடி பாட்டில்கள் குறுகியதாக இருந்தால் அதை சுத்தம் செய்யும்போது கைவிரல்கள்உள்ளே போகாது. அத்தகைய பாட்டில்களை சுத்தம் செய்ய ஒரு எளிய வழி... எலுமிச்சம்பழத்தை சிறிதாக துண்டுகள் செய்து பாட்டிலில் போட்டு அதன் உள்ளே பாதியளவு தண்ணீர் விட்டு குலுக்கினால் கறைகள் போய்விடும். பாட்டில்களை வாஷ் பண்ண மிகவும் சுலபமானவழி நியூஸ் பேப்பரை சிறுதுண்டுகளாக பிச்சு பாட்டிலில் போட்டு துளி உப்பும் சேர்த்து குலுக்கவும் பிறகு வாஷ் பண்ணால் போதும் சுத்தமா கரைகள் நீங்கிடும்

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #8 on: February 02, 2015, 08:42:36 PM »


உளுந்து வடைக்கு அரைக்கும்போது மிக்ஸியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுப் பின் அரைத்தால், மிக்ஸியிலிருந்து சுலபமாக எடுக்க முடியும். கழுவவும் சுலபம்.

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #9 on: February 02, 2015, 08:43:20 PM »


டம்ளர் நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு, சிறிது பனை வெல்லம் போட்டுக் கலக்கிச் சாப்பிட்டால்... நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #10 on: February 02, 2015, 08:44:07 PM »


சேமியா கேசரி செய்யும்போது முதலில் தண்ணீரை மட்டும் ஊற்றிக் கொதிக்கவைத்து, சேமியாவை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்துவிட்டு, அதன்பின் சேமியாவுடன் நெய், சீனி, முந்திரிப் பருப்பு, கலர் சேர்த்துக் கிளறினால் கேசரி ஆறிய பின்னும் உதிர் உதிராக, சுவையாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #11 on: February 02, 2015, 08:44:50 PM »


பீர்க்கங்காய் தோலை ஒரு நாள் முழுவதும் வெயிலில் உலர்த்தி, தேவையான அளவு மிளகாய் வற்றல், சிறிதளவு புளி, உப்பு, பூண்டு பற்கள் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் தாளித்து, அரைத்த பொடியைப் போட்டு நன்கு வதக்கி பொலபொலப்பாக எடுத்தால்... பீர்க்கங்காய் பொடி தயார்!

Offline MysteRy

Re: ~ சமையல்....டிப்ஸ் ~
« Reply #12 on: February 02, 2015, 08:45:39 PM »


சட்டென்று பருப்பு உசிலி பொரியல் செய்ய ஒரு ஐடியா!  இரண்டு கைப்பிடி பொட்டுக்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள். அத்துடன் பச்சை மிளகாய்த் துண்டுகளையும், சிறிதளவு உப்பையும் சேர்த்து, மேலும் இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பாக பொடித்து எடுங்கள். வாணலியில் தாளிப்பு செய்து, இந்தப் பொடியை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்துவிட்டு, வெந்த காய்களைப்  போட்டுப் புரட்டினால் பருப்பு உசிலி தயார்,.