Author Topic: ~ குட்டீஸ்-16 ஹெல்த்தி ரெசிப்பி! ~  (Read 914 times)

Offline MysteRy



தேவையானவை:

 காய்ந்த மஞ்சள் மக்காச் சோளம்  ஒரு குழிக்கரண்டி, உப்பு  தேவையான அளவு, வெண்ணெய் அல்லது எண்ணெய்  2 டீஸ்பூன், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை அல்லது நிறத்துக்கேற்ப.

செய்முறை:

 ஒரு பாத்திரத்தில், சோளத்தைப் போட்டு, உப்பு, மஞ்சள்தூள், லேசான எண்ணெய் சேர்த்து, நன்றாகக் குலுக்கவும். அடுப்பில், குக்கரைவைத்து, மீதம் உள்ள எண்ணெய் அல்லது வெண்ணெயை விட்டு நன்கு காய்ந்ததும், அதில் சோளத்தைப்போட்டு, அதிகம் அழுத்தாமல் மூடிவைக்கவும். குக்கர் நன்றாகக் காய்ந்திருக்க வேண்டும். கேஸ்கட், வெயிட் போட வேண்டாம். இரண்டு நிமிடங்கள் போதும். பாப்கார்ன் படபடவென வெடித்துப் பொரியும். விசில் போடுவதற்கான சத்தம் வந்ததும், குக்கரை லேசாக ஒருமுறை குலுக்கவும். பொரியும் சத்தம் குறையும்போது அடுப்பை அணைக்கவும்.

கவனிக்கவும்:

காய்ந்த குக்கரில் சோளத்தைப் போட்டதும் மூடிவிடவும். ஏனெனில், சோளம் பொரிந்து வெளியே தெறிக்கலாம். மிதமான தீயில் சரியாக, முறையாகச் செய்ய வேண்டும். இல்லையெனில் அடிப்பிடிக்கும்.

குறிப்பு:

ஸ்வீட்கார்னில் இதைச் செய்ய முடியாது. கடைகளில் 'சத்துமாவுக்குச் சேர்க்கும் மக்காச் சோளம்’ என்று கேட்டு வாங்க வேண்டும். ஒரு குழிக்கரண்டி சோளத்தில், ஒரு பவுல் நிறைய அல்லது ஒரு குழந்தைக்குத் தேவையான அளவு பாப்கார்ன் செய்யலாம்.

பலன்கள்:

ஆன்டிஆக்ஸிடண்ட், நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை நிறைந்த மக்காச் சோளம் உடல் வலுவுக்கு நல்லது.

Offline MysteRy



தேவையானவை:

 ராகி மாவு  ஒரு கப், பொடித்த வெல்லம்  அரை கப், மசித்த பலாப்பழம்  3 சுளை அல்லது வாழைப்பழம்  1, நெய் அல்லது எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:

 இவை மூன்றையும் சேர்த்துக் கரைத்து,  தோசை மாவு பதத்தில் எடுத்துக்கொள்ளவும். சின்னச் சின்ன தோசைகளாக வார்த்து, நெய் அல்லது லேசான எண்ணெய் தடவி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

பலன்கள்:

மிகச் சுவையான, சத்தான மாலை நேர ஸ்நாக். மதிய உணவுக்கும் கொடுத்து அனுப்பலாம். ராகி, கால்சியம் சத்து நிறைந்த தானியம். மேலும் இதில் நார்ச்சத்தும், தாதுச்சத்துக்களும் அடங்கியுள்ளன. ராகி மாவில் கஞ்சி, கூழ் செய்வதற்குப் பதிலாக, இது போன்ற பலகாரங்கள் செய்துகொடுத்தால், குழந்தைகள் விரும்பி உண்பார்கள். வாழை அல்லது பலா சேர்ப்பதால், நல்ல மணமும் சத்தும் கூடுதல் ப்ளஸ். சர்க்கரையின் அளவைக் குறைத்துவிட்டு, பழத்தின் அளவை விருப்பம் போல அதிகப்படுத்திக்கொள்ளலாம்.