Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்.. ~  (Read 699 times)

Offline MysteRy

~ டிப்ஸ்... டிப்ஸ்.. ~
« on: December 31, 2014, 02:48:25 PM »


வடைக்கு  அரைத்த  மாவு சற்று நீர்க்க இருந்தால், ஒரு கைப்பிடி பயத்தம்பருப்பை மாவில் கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பயத்தம்பருப்பு ஊறி மாவு கெட்டிப்பட்டுவிடும். பிறகு வடைகள் செய்தால் இவை நன்றாகப் பொரிந்து அருமையான சுவையுடன் இருக்கும்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்.. ~
« Reply #1 on: December 31, 2014, 02:49:01 PM »


பாகற்காயை குழம்பு, பிட்ளை, பொரியல் என எந்தப் பதார்த்தமாகச் செய்தாலும்... அதனுடன், கொஞ்சம் கேரட் அல்லது பீட்ரூட்  துண்டுகளைக் கலந்துவிட்டால் கசப்பு வெகுவாகக் குறைந்துவிடும். பதார்த்தத்தில் சத்தும் கூடும்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்.. ~
« Reply #2 on: December 31, 2014, 02:49:56 PM »


ஈஸி மோர்க்குழம்பு செய்ய வேண்டுமா? இரண்டு மிளகாய் வற்றல், கால் கப் துருவிய தேங்காய், அரை ஸ்பூன் சீரகம், கொஞ்சம் கறிவேப்பிலை இவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு டம்ளர் கடைந்த தயிரில், அரைத்து வைத்துள்ள விழுது, கால் ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான உப்பு  சேர்த்துக் கலக்கி, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டால் மோர்க்குழம்பு தயார்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்.. ~
« Reply #3 on: December 31, 2014, 02:50:36 PM »


அடைக்கு மாவு அரைக்க அரிசி, பருப்பு ஊற வைக்கும்போது, இரண்டு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசியையும் தனியாக ஊறவைக்கவும். அடை மாவு அரைத்ததும், ஜவ்வரிசியையும் அரைத்து அடை மாவுடன் சேர்த்து விட்டால், அடை கூடுதல் மொறு மொறுப்புடன் சுவையாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்.. ~
« Reply #4 on: December 31, 2014, 02:51:11 PM »


பால் சேர்த்து செய்யும் சேமியா, ரவை, ஜவ்வரிசி பாயசங்கள் சூடாக இருக்கும்போது அதில் சர்க்கரையைச் சேர்த்தால் திரிந்தது போல ஆகிவிடும். அதனால் பாயசத்தை இறக்கி வைத்துவிட்டு, சற்று நேரம் கழித்து பொடித்த சர்க்கரையைச் சேர்த்தால், பாயசம் சுவையாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்.. ~
« Reply #5 on: December 31, 2014, 02:51:48 PM »


பொரித்து எடுத்த அதிரசம் மென்மையாக இல்லாமல் கரகரவென்று இருக்கிறதா? அதிரசங்களை இட்லித் தட்டில் வைத்து ஒன்றிரண்டு நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்தால், அதிரசம் மென்மையாகிவிடும்.