Author Topic: ~ ஆண்ட்ராய்ட் போனில் வி.எல்.சி. மீடியா பிளேயரை தரவிறக்கம் செய்ய..! ~  (Read 1006 times)

Offline MysteRy

ஆண்ட்ராய்ட் போனில் வி.எல்.சி. மீடியா பிளேயரை தரவிறக்கம் செய்ய..!



கம்ப்யூட்டரில், எம்பி 4 உட்பட பல பார்மட்களில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்க நாம் அனைவரும் விரும்பிப்பயன்படுத்துவது வி.எல்.சி. பிளேயர் ஆகும்.

இதனை ஆண்ட்ராய்ட் போனுக்கென வடிவமைத்து, சோதனைப் பதிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடியோ லேன் நிறுவனம் வெளியிட்டு, வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.

இப்போது இந்த புரோகிராம் நிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இதனைப் பெறலாம்.

சோதனைத் தொகுப்பு ஆண்ட்ராய்ட் 5.0 லாலி பாப் சிஸ்டத்தில் இயங்குகையில் அடிக்கடி கிராஷ் ஆனது. மேலும், குறிப்பிட்டுச் சொல்ல முடியாத சில பிரச்னைகளும் கண்டறியப்பட்டன.

குறிப்பாக ARMv8 ப்ராசசர் பொருத்தப்பட்ட, ஆண்ட்ராய்ட் போன்களில் இவை ஏற்பட்டன. இவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு, முழுமையான தொகுப்பாகத் தரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் பதிப்பு 2.1 முதல் அதன் பின் வந்த, அனைத்து ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களிலும் இது சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, வீடியோ லேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை தரவிறக்கம் செய்வதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்..
https://play.google.com/store/apps/details?id=org.videolan.vlc.betav7neon