Author Topic: ~ கால்களுக்கு வலிமை தரும் நின்றநிலை பயிற்சி ~  (Read 673 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226895
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கால்களுக்கு வலிமை தரும் நின்றநிலை பயிற்சி

முதலில் விரிப்பில் கால்களை ஒரு அடி இடைவெளி விட்டு நிற்கவும்.கைகளை தோள்களுக்கு இணையாக நீட்டவும். இது தான் முதல் நிலை. பின்னர் கால்களை கைகளுக்கு இணையாக நீட்டி கால் முட்டி வரை நாற்காலியில் அமருவது போல் அமர வேண்டும்.

அப்போது கைகள், கால் முட்டிகளுக்கு இணையாக இருக்க ( படத்தில் உள்ளது போல்) வேண்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கிவாறு இருக்கவேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் உங்கள் எடை முழுவதும் கால் குதிகாலில் தாங்கியவாறு (படத்தில் உள்ளபடி) அடுத்த நிலைக்கு வர வேண்டும்..

இந்த நிலையில் கைகளை தோள்களுக்கு இணையாக நீட்டி உள்ளங்கைகள் மேல் நோக்கி பார்த்தவாறு இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இந்த நிலையில் நிற்பது சற்று கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்து வந்தால் செய்ய எளிமையாக வரும். இந்த நிலையில் 15 வினாடிகள் வீதம் 15 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது.

பின்னர் படிப்படியாக நன்கு பழகிய பின்னர் 25 முதல் 30 முறை செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் கால்கள், பாதங்கள் குதிகால்கள் நல்ல வலிமை அடைகிறது. சிலருக்கு குதிகால் வலி இருக்கும். அவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் வலி படிப்படியாக குறையும்.