Author Topic: ~ பெண்களைத் தாக்கும் தைராய்டு நோய் பற்றிய தகவல்கள் :- ~  (Read 358 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பெண்களைத் தாக்கும் தைராய்டு நோய் பற்றிய தகவல்கள் :-



பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று.

இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை, அயோடின் குறைவே இதற்குக் காரணம்.

கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. தைராய்டின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல் பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

இந்த குறைபாடு காரணமாக பெண்கள் குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவது, மேலும் சிலருக்கு பருவமடைவது என்பது மிக தாமதமாக ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் வருகின்றன.

சில பெண்களுக்கு தைராய்ட் பிரச்சனையால் கருத்தரிக்க முடியாமல் போகிறது. எனவே சிக்கல் உள்ள பெண்களுக்கு மகப்பேறு மருத்துவர்கள் முதலில் பரிசோதனை செய்வது தைராய்டு பிரச்சனையைத் தான். இதில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் பேர் இதனால் அவதிப்படுகின்றனர்.

தைராய்டு சுரப்பது குறைவானால், கொழுப்பு சக்தி அதிகமாகி, இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.

பொதுவாக தைராய்டு சுரப்பிகளில் ஏற்படுகின்ற ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராய்டிசன், தைராய்ட் கட்டிகள், ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை முக்கிய பிரச்சனைகள் ஆகும்.

ஹைப்போ தைராய்டிசன் என்பது சுரப்பியின் செயல் பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி ஆகின்றது. சிறுவயதிலேயே அதிக உயரம் வளர்வது. வயதைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும்.

ஹைப்பர் தைராயிடிசன் என்பது வயதானவர்களின் எடை குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது.

இதற்கு முக்கியமான மருந்து ரேடியோ ஆக்டிவ் அயோடின் என்கிறார்கள். முடியாமல் போனால் அறுவை சிகிச்சை தேவைப்படும்

ஹைப்போ தைராய்ட் பிரச்சனையால் வயதானவர்களுக்கு நினைவாற்றல், குறைந்து கொண்டே வருகிறது. சோர்வு, கவலை என மன நோயாளி போல் ஆகி விடுகின்றனர்.

தைராய்டு கட்டிகள் என்பது கழுத்தில் வீக்கம் ஏற்படுவது மற்றும் சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாட்டினால் தான் வருகிறது.

இவர்கள் அயோடின் கலந்த உப்பை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

தைராய்டு கட்டிகள் சில புற்று நோய் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு மிக அபூர்வமாக வரலாம். தைராய்டு கட்டிகள்
அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சையும் இருக்கிறது.

இந்த நோய் ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு அதிகமாக தாக்குகிறது. எனவே பெண்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நோயிலிருந்து விடுபட கீரைகள், பழங்கள், பச்சைக்காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

முக்கியமாக தைராய்டு நோய் இருப்பவர்கள், கொள்ளு தானியத்தை உணவில் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். துவையல், ரசம், முளைக் கட்டிய சுண்டல், கொள்ளு பொடி என்று செய்து சாப்பிடலாம். இட்லிப்பொடியுடன் வறுத்து அரைத்து சேர்க்கலாம்.

அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.