நட்பு
பாதையோரம் கண்டெடுத்த
ரூபா நோட்டு போன்றது
தொலைத்தவன் துன்பப்படுவான்
கிடைத்தவன் மகிழ்ச்சியடைவான்
நட்பு என்பது
நம் கண்களை விட்டு பிரிந்து செல்லும்
கண்ணீர் துளி அல்ல
நாம் வெளியே எறிந்தாலும்
மறுபடி நம்மை ஆக்ரமிக்கும்
சுவாசக்காற்று
நட்பு
ஒரு நண்பன் இருந்தால்
ஆகாயத்தையும் வானவில்லாக வளைக்கலாம்
கடலையும் கயரராக திரிக்கலாம்
தென்றலையும் சங்கீத ஒலியாக மாற்றலாம்
ஒரு நண்பன் இருந்தால்
கூட ஒரு ராணுவம் இருப்பது போல
கூட ஒரு ஆசான் இருப்பது போல
கூட ஒரு மருத்துவர் இருப்பது போல
கூட ஒரு தாய் இருப்பது போல
கூட ஒரு காதலி இருப்பது போல
நட்புக்கு
ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை
சாதி மத வேற்றுமை இல்லை
வயது வரம்பில்லை
ஆண் பெண் என்ற வேறுபாடும் இல்லை
காதலி கூட அழவைப்பாள்
நண்பன் அந்த கண்ணீர் துளி
நிலத்தில் விழுமுன் தாங்கிப் பிடிப்பான்
கூடப் பிறந்தவர்கள் கூட
நாம் சாப்பிட்டதை சாப்பிட தயங்குவார்கள்
நண்பன் நான் கடித்த மாங்காயை
தானும் கடிப்பான்
நான் பிடித்த சிகரட்டை
தானும் பிடிப்பான்
தன்னிகர் அற்றது நட்பு
தன்னலம் அற்றது நட்பு