மொபைல் போன்- ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி?:

இன்றைய உலகில் செல்போன்கள் உபயோகிக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரிடமும் செல்போன்கள் உள்ளன. இந்நிலையில் அதன் கதிர்வீச்சிலிருந்து முழுவதுமாகத் தப்பிக்க இயலாது.
ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், நாம் செல்போன் பயன்படுத்தாவிட்டாலும், பிறரின் பயன்பாட்டாலும் செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சாலும் பாதிக்கவே செய்யும். முக்கியமாக மூளை செயல் இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் நகர்ப் புறங்களில் குருவிகளைக் காண முடிவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கதிர்வீச்சைக் குறைத்து நம்மைப் பாதுகாக்கும் வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு பின்பற்றுவது நல்லது.
கதிர்வீச்சால் மூளையில் இரண்டு வகையான புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் போன் உபயோகிப்பவர்களுக்கு இந்நோய் உருவாகுமாம். ஆகவே இதற்கு மாற்றாக லேன்ட்லைன் போனை உபயோக்கிகலாம். செல்போன் உபயோக்கிக்கும் அளவுக்கு செய்திகளை சுருக்கமாக மற்றவர்களுக்கு , முடிந்தவரை எஸ்.எம்.எஸ் வசதியைப் பயன்படுத்தவும். குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதோ, பேசுவதோ வேண்டாம். எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால், குழந்தைகளை சுலபமாக கதிர்வீச்சு தாக்கக்கூடும். சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம்.
காதில் வைத்துப் பேசுவது, ஹெட்போனில் பேசுவது போன்றவைகளைவிட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியைப் பயன்படுத்திப் பேசுவது சிறந்தது. ஆனால், மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், தூங்கும்போது போனை அருகிலேயே வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே கைவிடவும்.
மற்றவர்களை தொடர்புகொள்ளும்போது, அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் வைத்துப் பேசவும். ரிங் போகும்போது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும்போது ஏறப்டும் கதிர்வீச்சு அளவைவிட ‘ரிங்’ போகும்போது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை ஏற்படுத்துகின்றது. இடதுபக்க காதில் வைத்து பேசவும். வலது எனில் மூளை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
செல்போனில் விளையாடுவதையும், வைப்ரேஷனில் வைத்திருப்பதையும் முற்றிலுமாகத் தவிருங்கள். முக்கியமாக பயணம் செய்யும்போது விளையாடவேண்டாம். போன்களை ஆண்கள் தங்கள் இடதுபக்க பாக்கெட்டில் வைக்கவேண்டாம். பேசும்போது இரண்டு ஓரங்களை பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின்பக்கத்தை மூடிக்க்கொண்டு பேச வேண்டாம்.
இப்படியாக பலவித முன்னெச்சரிககை நடவடிக்கைகளின் மூலம் மொபைல் போன்களை பயன்படுத்தும் சரியான வழிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.