வெற்றி என்பது ஒரு
இலக்கல்ல அது
தவறுகளின் திருத்தம்
தடைகளைத் தாண்டிய
விடியல்
வெற்றிப் படிகளின் வெளிச்சத்தில்
தோற்றபாதைகளின் இருட்டுச் சுவடுகள்
கண்ணுக்குத் தெரிவதில்லை
சாதனை முகமூடி
வேதனை வலிகளை
வெளி உலகிற்கு மறைத்துவிடும்
வெற்றி சிலருக்கு
சாகச முத்திரைகள்- ஆனால் சிலருக்கோ
சோதனைப் படிகளில்
கால் வலிக்க
பதித்த சாதனை சுவடுகள்
சின்ன நூலிடை
சிறுவாயில் தான் பிடித்து சிறிதும் சளைக்காமல்
பின்னும் சிலந்தி போல
சிறுக சிறுக
எடுத்து வைத்த செங்கல் தான்
சிங்கார மாளிகையாய்
செழித்து நிற்கும்
துணிவெனும் வலை பின்னு
தொடர்த்து நட
தவறுகளை தாண்டி நட
அது வெற்றிக்கு வித்தாகும்