Author Topic: ~ ரசகுலா:- ~  (Read 579 times)

Offline MysteRy

~ ரசகுலா:- ~
« on: October 29, 2014, 08:19:02 PM »
ரசகுலா:-



தேவையான பொருட்கள்:-

பால் - 4 கப்
லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
சக்கரை - 3 கப்
தண்ணீர் - 4 கப்
ஏலக்காய் பவுடர் - 1/4 ஸ்பூன் 

செய்முறை:-

1) முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்க விடவும்.

2)நன்கு கொதிக்கும் போது அதில் லெமன் ஜூஸ் விட்டு திரியும் வரை கிளறவும்.

3) நன்கு திரிந்ததும் அதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி தண்ணீர் ஈரும் வரை வைக்கவும். பின் அதில் இருந்து எடுக்கும் பன்னீர் நன்கு cold தண்ணீரில் அலசி அதை தண்ணீர் ஈரும் வரை வைக்கவும்.

4) தண்ணீர் போனதும் அதை நன்கு சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைக்கவும்.

5) பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர்,ஏலக்காய் பவுடர் போட்டு கொதிக்க விடவும்.

6) கொதிவந்ததும் அதில் செய்து வைத்து உள்ள பன்னீர் உருண்டை களை போட்டு 15-20 நிமிடம் வேகவிடவும்.

7) பின் ஆறவைத்து fridge ல் 4 மணி நேரம் வைத்து பரிமாறினால் சுவையான ரசகுலா ரெடி..