Author Topic: மின்சாரவெட்டும் அதன் பாதிப்பும்  (Read 6371 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மின்சாரவெட்டும் அதன் பாதிப்பும்


அடுத்த வீட்டில் குழந்தை அடி தொண்டையில் அழும் குரல் இரவு சுமார் மணி 1 இருக்கும், அவர்கள் வீட்டு கதவை தட்டலாம் என்றால் மின்வெட்டினால் எங்கும் இருள், குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்பது காலையிலேயே தெரியும், இருந்தாலும் வீரிட்டு அழும் குழந்தைக்கு காற்று இல்லாததால் தான் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம்,

அடுத்தநாள் அவர்களை நேரில் பார்த்து குழந்தை நேற்று இரவு அழுதுகொண்டே இருந்ததே என்று கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இரவு நேர மருந்து கொடுக்க குழந்தையை தூக்கி வாயில் மருந்தை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொண்டு இருந்த சமயம் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதால் கையிலிருந்த மருந்து குழந்தையின் கை தட்டி மூக்கினுள் கொட்டிவிட்டது, மருந்தின் எரிச்சல் தாளாமல் குழந்தை இரவு முழுவதும் தூங்கவே இல்லை என்றார்கள்.

அதிக நடமாட்டம் உள்ள சாலை தான் திடீரென்று மின்சாரம் துண்டிக்க பட்டவுடன் கையில் பிடித்துவந்த பையை யாரோ உருவிக்கொண்டு போய்விட்டார்கள், கழுத்தில் இருந்த சங்கிலியை பறிகொடுத்து விட்டேன், இப்படியெல்லாம் சொல்ல கேட்டிருக்கிறேன், ஒரு வயதான மூதாட்டி சொன்னார் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டவுடன் கழிப்பறையிலிருந்து வெளியே வரும்போது அங்கு இருந்த தண்ணீர் நிறைந்த வாளியில் இடித்து விழுந்ததில் கால் எலும்பு முறிந்து விட்டது, வயதாகிவிட்டதால் சிகிச்சை செய்தும் பலன் மிக குறைவாகவே உள்ளது, இப்படி பலவிதமான வேதனைகள்.

நான் போன இடுகையில் குறிப்பிட்டிருந்தது போல மின்சார துண்டிப்பை பயன் படுத்தி பாலியல் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு சிறந்த வழி இருக்கு, இப்போதெல்லாம் பெண் போலீசாரிடம் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்தால் போதும், அவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு எந்த தெருவில் பாலியல் தொல்லைகளை இருட்டை பயன் படுத்தி செய்கிறார்களோ அதே தெருவில் சாதாரண உடையில் பெண் போலீசு வந்து சம்பந்தப்பட்ட "பொறுக்கிகளை" பிடித்து கொண்டுபோய் கொடுக்க வேண்டிய உபசாரம் கொடுத்தால்,மின்சார துண்டிப்பை பயன்படுத்தி செயல் பட நினைபோரின் தந்திரங்களை சூழ்ச்சிகளை வெல்ல முடியும்,

இதற்க்கு தேவை சம்பந்தப்பட்ட பெண்கள் முன்வந்து போலீசில் புகார் செய்வது மற்றவர்களையும் இது போன்ற பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும், முன் வாருங்கள் பிரச்சினைகளை நீக்கி காந்தி கண்ட இந்தியாவை படைப்போம், "எப்போது இந்நாட்டில் ஒருபெண் நடு இரவில் தனியே நடந்து போக முடியுமோ அப்போதுதான் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது" என்று சொன்ன அவருடைய வாக்கு உண்ணமையாக்க முன் வருவோம்.
வாழ்க இந்தியா !!!!!!!!!! வாழ்க காந்தியம் !!!!!!!!!!
                    

Offline RemO

tamil nadu la iruka periya piratchanai ithu than
ithuku makkalagiya naamum minsaaraththai veenakamal iruntha nalathu