Author Topic: ~ ஆப்பிள் - பப்பாளி அல்வா ~  (Read 529 times)

Offline MysteRy

ஆப்பிள் - பப்பாளி அல்வா



தேவையானவை:
பப்பாளிக்காய் (துருவியது), ஆப்பிள் (துருவியது), - தலா அரை கப், பால் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், முந்திரி, திராட்சை - சிறிதளவு, விரும்பிய எசன்ஸ் (பாதாம், வெனிலா, ரோஸ்) - சிறிதளவு.

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு... பப்பாளி, ஆப்பிள் துருவல்களைப் போட்டுக் கிளறவும். பிறகு, பாலை சேர்த்து வேகவிட்டு, சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். அனைத்தும் நன்றாக கலந்த பிறகு, நெய் விட்டுக் கிளறி, கலவை சுருண்டு, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம், எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அல்வாவின் மீது பரவலாகத் தூவி அலங்கரிக் கவும்.
விருப்பப்பட்டால், சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.