Author Topic: ~ பப்பாளி பஜ்ஜி ~  (Read 375 times)

Offline MysteRy

~ பப்பாளி பஜ்ஜி ~
« on: October 08, 2014, 09:40:35 PM »
பப்பாளி பஜ்ஜி



தேவையானவை:

பப்பாளிக்காய் -1,
பஜ்ஜி மிக்ஸ்,
சமையல் எண்ணெய்,
சிறிது உப்பு,
பெருங்காயப் பொடி.

செய்முறை:

வாழைக்காய் போன்று பப்பாளிக் காயை சீவிக் கொள்ளவும்.
பஜ்ஜி மிக்ஸை தண்ணீர்விட்டு பிசைந்து கொள்ளவும்.
அதில் சிறிது பெருங்காயப் பொடியையும் தேவையான உப்பைக் கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும். பிறகு பப்பாளித் துண்டுகளை பஜ்ஜி மிக்ஸில் நனைத்து எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
பப்பாளியை பழமாக மட்டுமே சாப்பிட முடியும் என்று நினைப்பவர்கள், இந்த பஜ்ஜிக்குப் பிறகு பஜ்ஜிக்காகவும் பப்பாளியைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.