Author Topic: ~ செல்’லும் இடமெல்லாம் சிறப்பு! டிப்ஸ் ~  (Read 652 times)

Offline MysteRy

செல்’லும் இடமெல்லாம் சிறப்பு!
டிப்ஸ்



போட்டோ, வீடியோ போன்றவற்றை போன் மெமரியில் சேமித்து வைக்கும்போது, அதில் அளவுக்கதிகமான டேட்டாக்கள் சேர்வதால் போன் ஸ்லோவாகலாம். எனவே, டேட்டாக்களை மெமரி கார்டில் சேமித்து வைக்க வேண்டும்.

அவ்வப்போது செல்போனின் ராம் மெமரியை செக் செய்யுங்கள். மெமெரி ஃபுல் ஆகும் நிலை வரும்போது, தேவையில்லாதவற்றை டெலிட் செய்துவிடுங்கள். இல்லையெனில், போன் எப்போது வேண்டுமானாலும் ஹேங் ஆகலாம்.

செல்போன் ஸ்லோ ஆவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, தேவையில்லாத ஆப்ஸ்களை வைத்திருப்பது. எனவே, அவ்வப்போது செக் செய்து பயன்படுத்தாத ஆப்ஸ்களை அகற்றிவிடுங்கள்.

ஐபோன் வைத்திருப்பவர்கள், 'ஃபைண்டு மை ஐபோன்’ என்கிற ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருங்கள். இதனால், உங்கள் போன் தொலைந்து போக நேர்ந்தால், அதை எடுத்தவர்களால் உங்கள் போனை ரீசெட் செய்து பயன்படுத்த முடியாது.

இரவு நேரங்களில் போனை சார்ஜில் போட்டுவிட்டு, காலையில் எடுப்பது பலரின் வழக்கம். இது சார்ஜ் ஆன பிறகும் செல்போனை மின் இணைப்பிலேயே வைத்திருக்கும். இப்படி அதிகப்படியான நேரம் மின் இணைப்பிலேயே இருப்பதால், பேட்டரி சீக்கிரமே வீக் ஆகும்.

உதவி:சென்னை, 'ஹலோ எஸ்.எஸ்.எஸ் மொபைல் ஷாப்’ சர்வீஸ் இன்ஜினீயர் சரவணன்