« Reply #1 on: April 04, 2014, 06:15:46 PM »
சிரிக்க மட்டும்:-

1) டீச்சர்: படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க பாபு?
வாண்டு பாபு: புக்கை மூடிடலாம்னு இருக்கேன்!
ஆசிரியர் : .............?
2) டீச்சர்: நான் உன்னை பயங்கரமா அடிச்சி கீழே தள்ளிட்டேன்... இது இறந்த காலம். இதுக்கு எதிர்கால வாக்கியம் என்ன?
வாண்டு பாபு: நீங்க ஜெயிலுக்கு போவீங்க!
டீச்சர் :..................
3) டீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?
வாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.
டீச்சர்: உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட?
பாபு: நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!
4) ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
வாண்டு பாபு: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.
5)ஆசிரியர்: வேடந்தாங்கல்ல இருக்குற சாம்பல் நிற கொக்குகள் எங்கிருந்து வருகின்றன?
வாண்டு பாபு: எல்லாம் முட்டைல இருந்து தான் சார்!
ஆசிரியர்: ??@@##
6) ஆசிரியர் : தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?
வாண்டு பாபு: HIJKLMNO.
ஆசிரியர் : என்ன பதில் இது?
வாண்டு: நீங்கதானே முந்தின வகுப்புல 'H to O' னு சொன்னீங்க.
ஆசிரியர் : .............?
7) தோழி 1 : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!
தோழி 2 : எதை வைத்து?
தோழி 1 : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
தோழி 2 : ?
8 ) தோழி 1 : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
தோழி 2 : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
தோழி 1 : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
தோழி 2 : ?
9) ஆசிரியர்;ஏண்டா!இவ்வளவு சீக்கிரமா ஸ்கூல் பெல்லை அடிச்சே ?
மாணவன் ;பிள்ளைங்க சந்தோசப் படுற மாதிரி எதாவது செய்யுன்னு தீசேர் தான் சொன்னாங்க..
ஆசிரியர்;?
10) நண்பர் 1 : நேற்றுதான் பிளாக் பெல்ட் வாங்கினியா? நீ கராத்தே சாம்பியன்னு சொல்லவே இல்லையே...
நண்பர் 2 : அட போடா !!! டிராயர் லூசா இருக்குன்னு பிளாக்பெல்ட் வாங்கினேன்!
நண்பர் 1 : ?
11) சிறுவன்: அப்பா செய்யிற தப்பு, பிள்ளையைப் பாதிக்கும்கிறது சரிதாம்பா...
தந்தை: என்னடா... பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
சிறுவன்: வீட்டுக் கணக்கை நீங்க தப்பா போட்டுக் கொடுத்ததுக்கு எனக்குல்ல உதை விழுகுது!
தந்தை: ?
12) ஆசிரியர் : கோபால், அமெரிக்கா இந்த வரைபடத்தில் எங்கே இருக்கு, எல்லோருக்கும் காட்டு.
(கோபால் சரியாகக் காட்டுகிறான்)
ஆசிரியர் : பாபு, நீ சொல்லு... அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?
வாண்டு பாபு : கோபால் சார்!
ஆசிரியர்: ?
13) ஆசிரியர்: ரொம்ப பழைய விலங்கு எது தெரியுமா?
வாண்டு பாபு: வரிக்குதிரை
ஆசிரியர்: எப்படி?
வாண்டு: அதுல கறுப்பு - வெள்ளை கோடு தான் இருக்கு. கலர் இல்ல... அதான்!
ஆசிரியர்: ?
14 ) ஆசிரியர்: கிருஷ்ணர், இயேசு, ராமர், புத்தர் இவங்களுக்கெல்லாம் என்ன ஒற்றுமை?
வாண்டு பாபு: இவங்க எல்லாரும் அரசு விடுமுறை நாளன்னிக்கு பொறந்தாங்க சார்!
ஆசிரியர்: ?
« Last Edit: May 11, 2014, 12:08:42 PM by MysteRy »

Logged