Author Topic: ஜலதோஷத்தின் மறுபக்கம்  (Read 613 times)

Offline Little Heart

ஜலதோஷத்தின் மறுபக்கம்
« on: September 25, 2014, 01:35:02 PM »
பொதுவாக ஜலதோஷம் (தடிமன், சளி) உடல் நலத்திற்கு கேடு என்று பலர் கூறுவதைக் கேட்டு இருப்பீர்கள். ஆனால், உண்மை சொல்லப் போனால் நமக்கு அடிக்கடி ஜலதோஷம் வருவது நமது உடல் நலத்தைப் பேணி காக்க மிகவும் உதவுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியாத ஒரு விடயம் ஆகும்! அது ஏன் என்பதை இந்த அறிவு டோஸில் அறியத் தருகிறேன்.

உடலில் காணப்படும் நச்சுத் தன்மை மற்றும் கழிவுகளால் ஆன செல்களை பொதுவாக பழைய செல்கள் என்று கூறலாம். பெரும்பாலும் வைரசுகள் நமது உடலைத் தாக்குவதால் ஏற்படும் ஒரு விளைவு தான் ஜலதோஷம் என்கின்றோம். இப்படி உடலினுள் வரும் ஜலதோஷ வைரசுகள் பெரும்பாலும் நமது உடலில் உள்ள இந்தப் பழைய செல்களைத் தான் தாக்கின்றன. அந்தத் தாக்கத்தினால் இந்தப் பழைய செல்கள் நமது உடலை விட்டு நீக்கப்பட்டு, பின்பு புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. எனவே, ஜலதோஷ வைரசுகள் இந்தப் பழைய செல்களைக் கண்டறிந்து தாக்குவதின் விளைவாக, நமது உடலில் பழைய செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் உருவாகின்றன. எனவே, இப்படிப் பார்த்தால், நான் ஆரம்பத்தில் கூறியது போல் ஜலதோஷம் நமது உடலுக்கு நல்லதைத் தான் செய்கின்றது!

ஆனால் ஒரு எச்சரிக்கை நண்பர்களே: நான் மேலே குறித்தது அனைத்தும் நோய் இல்லாத, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களுக்கு மட்டுமே! ஏற்கனவே வேறு ஏதும் நோய் உள்ளவர்களுக்கு இப்படியான வைரசுகள் பெரும் தாக்கத்தைக் கூட உண்டாக்கலாம்!