Author Topic: கொட்டாவி ஏன் வருகிறது?  (Read 653 times)

Offline Little Heart

கொட்டாவி ஏன் வருகிறது?
« on: September 25, 2014, 01:23:14 PM »
கொட்டாவி என்றால் என்ன? நமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதைக் கொட்டாவி என்கிறோம். கொட்டாவியானது சோர்வு, சலிப்பு, அதிக வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றோடு தொடர்பு உடையது. ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா? கொட்டாவியை தொற்றுச் செயல் என்றும் அழைப்பார்கள், அது ஏன் என்றால், சுற்றி இருப்பவர்கள் விடும் கொட்டாவி ஒரு மனிதனுக்குக் கொட்டாவி விடத் தூண்டும் காரணத்தால் தான். இதை மனிதர்களிடையே மட்டும் அவதானிக்கவில்லை, சிம்பான்சிக் குரங்கு மற்றும் நாய்களுக்கும் கூட கொட்டாவி தொற்றுச் செயலாக உண்டாவது என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.

இனி கொட்டாவி ஏன் விடுறோம் என்று பார்ப்போம். கொட்டாவியானது குழுவாய் இருக்கும் விலங்குகளை ஆயத்தப்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளார்கள். அது அவற்றின் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவை அதிகரித்து, அவை பல நடவடிக்கைகளுக்குத் தயாராக உதவுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றது. மற்ற சில ஆய்வுகளோ கொட்டாவியானது மூளையைச் சாந்தப் படுத்துகின்றது எனத் தெரிவிக்கின்றது.

சரி, இப்போ கூறுங்கள் நண்பர்களே, வேறு யாரும் கொட்டாவி விடுவதைப் பார்க்கும் போது உங்களுக்கும் கொட்டாவி விடத் தூண்டுமா?