பெண்களுக்கு இணையாக ஆண்களும் தங்களை எப்போதுமே இளமையாகவும் ஹேண்ட்சம்மாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் எவ்வளவு பேர் அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார்கள் என்பது கேள்விக்குரிய விஷயமாகும்.
நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல உணவுகள், நல்ல உடற்பயிற்சி என்று எத்தனையோ விஷயங்கள் ஆண்களை இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. ஆனால், அவ்வாறு இருப்பதற்கு அப்பாலும் சில வழிகள் உள்ளன.
தினமும் ஷேவிங் வேணாம்... தினமும் ஷேவிங் செய்வதால், அது உங்கள் முகத்தில் உள்ள தோலைப் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, தினமும் ஷேவிங் செய்வதைத் தவிருங்கள்.