Author Topic: பேரின்ப அனுபவம்  (Read 1356 times)

Offline Global Angel

பேரின்ப அனுபவம்
« on: December 10, 2011, 04:56:57 AM »
பேரின்ப அனுபவம்


கடவுள் இருக்காரா இல்லையா.

இரண்டில் ஒன்று இருந்தே ஆகவேண்டும்,

முதலில் இல்லை என்பது பற்றி: சிலர் கருத்து, அல்லது நம்பிக்கை "இல்லை" என்பது. அதற்க்கு அவர் கூறும் பல காரணங்கள். அந்த காரணங்கள் எல்லாம் ஏற்ப்பு உடையதா இல்லையா,என்றால் "இல்லை" என்று நம்பும் மனங்களுக்கு ஏற்ப்பு, "இருக்கு" என்போர்க்கு ஏர்ப்பில்லை.

என்னை பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை என்பது வேறு, கடவுளுடன் ஏற்ப்பட்ட அனுபவங்கள் வேறு, ஏன் என்றால் பலர், கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை கொண்டு, வணங்குதல் அதற்குரிய சடங்குகளை செய்வது என்று இருப்பார், அவரிடம் கடவுளை பற்றிய அனுபவம் இருக்கா என்று கேட்டால் பெரும்பாலும் அப்படி ஒன்றும் இல்லை' என்பார், இன்னும் சிலர் ஏதோ ஒரு தேவைக்காக வேண்டிக்கொண்டு அந்த தேவை வேண்டிகொண்டது போல கிடைத்து விட்டால்அல்லது நடந்து விட்டால், அந்த சம்பவத்தை கொண்டு கடவுள் உண்டு என்றும் தான் நம்புவதும் சரியே என்றும் வாதிடுவர்.

வேண்டிகொண்டபடி நடக்கவில்லை என்றால் கடவுள் இல்லை என்பாரா என்பதுஒரு கேள்வி தான்.

என்னை பொறுத்தவரை "கடவுள்" என்று நாம் பெயரிட்டு அழைக்கும் ஒன்று உண்டு, நல்லது செய்வதே அதன் வேலை, அப்படியென்றால் உலகத்தில் எத்தனை வேதனைகள் இருக்கிறது அந்த "கடவுள்" என்ற ஒன்று இருந்தால் அது ஏன் ஒன்றும் நன்மை செய்யாமல் சும்மா பார்த்து கொண்டு இருக்கிறது என்பது பலரின் கேள்வி.

ஒரு மரத்தில் அல்லது ஒரு செடியில் பூக்களும் காய்களும் பழங்களும் காய்க்கிறது, அப்படி காய்க்கும் எல்லா பூக்களும் எல்லா காய்களும் எல்லா பழங்களும் சொத்தை இல்லாமல் வில்லங்கம் ஒன்றும் இல்லாமல் நூற்றுக்கு நூறு சதவிகிதம் முழுமையான பூவாகவோ காயாகவோ பழமாகவோ காய்த்து விடுவதில்லை. அதில் குறைகளும் சொத்தைகளும் வீணாக போனதும் இருக்கத்தானே செய்கிறது, குறைவுகளே இல்லாத கனிகளை ஒரு மரத்தாலோ செடியாலோ தர முடியாத போது, நாம் அதை 'கடவுள் ஏன் இப்படி குறைவைக்கிறார்' என்று எங்கேயும் சென்று முறை இடுவதில்லை.

மனிதர்களில் குறைவுள்ளவராய் பிறந்து விடும் போது மட்டும் " கடவுள் என்று ஒன்று இருந்தால் ஏன் இப்படி சிலர் குருடாகவும் ஊமையாகவும் முடவராகவும், இன்னும் பல குறைகளுடன் பிறக்க வேண்டும்" அதனால் கடவுள் என்று ஒன்று இருக்க வாய்ப்பு இல்லவே இல்லை என்றும் வாதாடுகின்றனர்.

நல்ல சக்தி அதாவது "கடவுள்" என்று ஒன்று இருக்கும் போது எதிர் சக்தி ஒன்றும் இருந்ததுதானே ஆக வேண்டும், அதாவது "தீமை செய்யும் சக்திகள்".

இந்த இரண்டின் போராட்டமும் இருந்துதானே ஆக வேண்டும், இறுதியில் எது மேலோங்கி நிற்கும் என்பதுதான் கேள்வி.

பல கடுமையான போராட்டங்களை சந்தித்த பின்னர் தானே ஒரு மகா பெரிய வெற்றியை காண முடிகிறது, பல வேதனைகள் சோதனைகளை தாண்டினால்தானே ஒரு நன்மையை அடைய முடிகிறது, தீய சக்திகளின் போராட்டம், நல்ல சக்தியை(கடவுளை) பேரின்பத்தை அடைய விடாமல் தடுக்கும் போராட்டத்தின் விளைவு தான் இந்த துன்பங்களுக்கும் குறைகளுக்கும் காரணம்.

வெற்றி ( பேரின்பமாகிய கடவுளை ) அடைய பல போராட்டங்களை சந்தித்தே ஆக வேண்டும், அந்த காலத்தில் பாட்டிகள் சிறிய பிள்ளைகளுக்கு கதை சொல்லுவார்கள் அதில் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி, பல அசுரார்களை வென்று இறுதியில் பெரிய குகையின் கல்லை திறந்து அங்கு கிளம்பும் பூதத்தைவென்று என்று கதை செல்லும் இறுதியில் தேடி சென்ற பொருளை அடைந்து வெற்றியுடன் திரும்பி வந்தான் என்று கதையை முடிப்பார்கள், அவை வெறும் பொழுது போக்கிற்கு சொல்லப்பட்ட கதைகள் அல்ல, அது நமது வாழ்க்கையின் ஆதார சூத்திரத்தை உதாரணமாக கொண்ட கதைகள்.

"கடவுள் என்பது ஒரு அனுபவம்", "கடவுள் என்பது இல்லை என்போர்க்கும் இருக்கு என்போர்க்கும் ஒன்றாகவே நன்மையை தருவது", நன்மையை அடையா விட்டாலும் கடவுள் என்பது தனது வேலையை செய்து கொண்டே தான் இருக்கும், ஒருவிதத்தில் பார்க்கபோனால் "கடவுள் இல்லை" என்று நம்புபவரிடமே அதிக அக்கறை கொள்ளும் அந்த "நல்ல சக்தி (கடவுள்)" , ஏன் என்றால் ஒரு நோயாளிக்குத்தான் மருத்துவரும் அதிக கவனிப்பும் தேவை, அதுபோல "கடவுள் இல்லை" என்போரிடமே கடவுளின் பார்வை அல்லது கவனம் அதிகம் இருக்கும்