Author Topic: ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பல்துலக்காதீர்கள்  (Read 522 times)

Offline Little Heart

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பல் துலக்கினால் தேவையில்லாத உணவுப்பொருட்களை நீக்கிவிடலாம் என்பது சிறந்த யோசனையாக இருக்கலாம். ஆனால் அப்படி செய்வது தவறு என்கிறது ‘கோல்கேட்’ நிறுவனம். அவர்களின் கருத்துப்படி, நாம் சாப்பிட்டவுடன் நமது பல்லின் எனாமல் மிருதுவாகிவிடுகிறது என்பதும் இதனால் நாம் சாப்பிட்ட 60 நிமிடத்திற்குள் பல் துலக்கும்போது இந்த எனாமலில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது தான்.

சாப்பிட்ட உடனே தான் பல் துலக்கக்கூடாது, ஆனால் ஒரு நாளைக்கு 2-3 முறைகள் பல் துலக்கலாம். அதிலும் இரவில் பல் துலக்குவது முக்கியமானது. நமது வாய்ப் பகுதி தூங்கும்போது உலர்ந்துவிடுவதால், பாக்டீரியாக்கள் எளிதில் தாக்கக்கூடும். வாயில் இரவு முழுவதும் சேர்ந்த அசுத்தங்களைக் காலையில் சுத்தம் செய்ய, பல் துலக்குவது அவசியமானது. சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு பல் துலக்குவது சிறந்தது. ஆனல், ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் பல் துலக்குவது ஈறுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

பல் துலக்குவது உங்களுக்கு அவ்வளவு கடினமான வேலையாக இருக்கப்போவதில்லை. எனவே ஒரு நாளைக்கு 2-3 முறை பல் துலக்குவதில் தப்பில்லை, நண்பர்களே. அது சரி, நீங்கள் தற்போது தினமும் 2-3 முறை பல் துலக்குவீர்களா?