Author Topic: விடியல்  (Read 5537 times)

Offline Global Angel

விடியல்
« on: December 10, 2011, 04:26:11 AM »
விடியல்


எழிலரசிக்கு ஏகப்பட்ட சந்தோசம் , இந்த வருடம் பிளஸ் டு வகுப்புகள் ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் எல்லா பாட புத்தகங்களும் இலவசமாக கிடைத்து விட்டது.

ஒவ்வொரு வருடமும் அவளுக்கு கிடைத்த பாட புத்தகங்கள் எல்லாமே இலவசமாக கிடைத்ததுதான் என்றாலும் அவற்றில் பெரும்பாலும் முதல் பத்து அல்லது பதினைந்து பக்கங்களும் கடைசி பத்து பதினைந்து பக்கங்களும் இல்லாமல்தான் கிடைக்கும். ஆனால் இந்த முறை கிடைத்த புத்தகங்கள் எல்லாவற்றிக்கும் இரண்டு பக்க வெளிப்புற அட்டையோடு கிடைத்ததில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி.

புத்தகங்களை பார்த்தால் மிகவும் குறைவாய் உபயோகப்படுத்தி இருப்பது தெரிந்தது. புத்தகத்தில் முதல் பக்கத்தில் பெயர் கூட எழுதாமல் கடையிலிருந்து வாங்கியபடியே இருந்தது.

எழிலரசியின் அப்பாவிற்கு நிரந்தர வருமானம் கிடையாது. சுவர் ஜன்னல் போன்றவற்றிற்கு வர்ணம் அடிப்பது அவருக்கு தெரிந்திருந்த தொழில். வருடத்தில் முக்கால்வாசி நாட்களும் பட்டினிதான். அவர்கள் பெற்றோருக்கு அவள் ஒருத்தி மட்டும் தான். எழிலின் அம்மா ஒரு வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்து கிடைக்கும் மாதம் முப்பது ரூபாயில் அவர்கள் குடியிருந்த குடிசையின் வாடகை ரூபாய் பதினைந்து கொடுத்து விட்டால் மீதமிருக்கும் பதினைந்து ரூபாய் மளிகை பாக்கி கொடுப்பதற்கு போதக் குறையாகிவிடும்.

மண்ணெண்ணெய் விளக்கில் தான் படிக்கவேண்டும், பெரும்பாலான நாட்களில் அந்த சிறிய விளக்கிற்கு கூட மண்ணெண்ணெய் இல்லாமல் மளிகை கடைக்காரனிடம் கடன் கேட்டு கெஞ்சி நிற்ப்பாள் எழிலின் அம்மா.

வறுமையின் கொடுமையில் வாழ்ந்து வந்த எழிலரசியின் அப்பாவின் நெடு நாளைய நண்பர் ஒருவரின் மகன் ராமு. படிப்பில் நாட்டமிலாதவன். விளையாட்டுகளில் ஆர்வமிருந்ததால் நன்றாக விளையாடி கிடைத்த சான்றிதழ்களை கொண்டு இந்தியன் ஏர்லைன்சில் வேலை கிடைத்தது.

பிளஸ் டு பரீட்சை எழுதி வெற்றி பெற்றால் கிடைக்கும் சான்றிதழைக் கொண்டு தற்போது கிடைத்திருப்பதை விட உயர்வான உத்தியோகம் கிடைக்கும் சம்பளமும் அதற்க்கேற்ப்ப உயர்வு கிடைக்கும் என்பதால் ராமு வாங்கிய புத்தகங்கள் என்று தான் புத்தகங்களை வாங்கியதற்கான காரணம் சொனான் ராமு.

ராமு புத்தகங்களை வாங்கிய பின் அவற்றை ஒருமுறை கூட தொட்டது இல்லை. ஒரே முறை தேர்விற்கு பணம் கட்டிவிட்டோமே என்பதற்காக பரீட்சை எழுதி தோல்வி அடைந்த பின் மறுபடியும் பரீட்சை எழுதும் விருப்பமின்றி அலமாரியில் வைத்த இடத்திலேயே இருந்தது.

ராமுவைப் போலவே அவனது அடுத்த வீட்டு பெண்ணும், பிளஸ் டு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி ராமுவிடமிருந்து பாடபுத்தகங்களை வாங்கி சென்று, தேர்வு எழுதி தோற்ற பின் ராமு தனது புத்தகங்களை அவளிடமிருந்து மறக்காமல் வாங்கி மறுபடியும் அலமாரிக்குள் வைத்து கொண்டான்.

அந்த புத்தகங்கள் இப்போது எழிலரசியின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. இரண்டு பேர் தோற்றபின் இப்போது உன்னிடம் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லித்தான் கொடுத்தான் ராமு.

எழிலரசிக்கு புத்தகம் முழுமையாய் கிடைத்ததே போதும் என்று மட்டும் திருப்பதி, வெற்றி தோல்வியை புத்தகம் கொடுக்குமா கொடுக்காதா என்றெல்லாம் யோசிக்க தெரிந்திருக்கவில்லை.

* * * * * * * * *

பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது அதன்படி குறிப்பிட்ட தேதிக்குள் ரூபாய் பதினான்கை நோட்டு புத்தகங்களுக்காக செலுத்தவேண்டும் என்று.

எழிலரசியின் அப்பா தலைமை ஆசிரியரிடம் சென்று பள்ளியிலோ வேறு இடத்திலோ தனக்கு வர்ணம் பூசும் வேலை ஏதேனும் கொடுத்தால் அதை செய்து கிடைக்கும் கூலியிலிருந்து நோட்டு புத்தகத்திற்கான பணத்தை கட்டி விடுவதாக கேட்க்க தலைமை ஆசிரியரும் அவரது நிலயை புரிந்து கொண்டு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வைத்திருக்கும் இரும்பு குழாய்களுக்கு கருப்பு வர்ணத்தை பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறறு கிழைமைகளில் அடித்து கொடுக்கும்படி சொல்ல அவ்வாறு அந்த தொகையை தலைமையாசிரியரிடம் செலுத்தினார் எழிலின் அப்பா.

பள்ளி இறுதி தேர்விற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்த சமயம் தேர்விற்கான கட்டணம் ருபாய் ஏழு செலுத்த வேண்டி இருந்தது. தலைமையாசிரியருக்கு எழிலரசியின் நிலைமை தெரிந்திருந்ததால் லயன்ஸ்கிளப் கொடுத்த ஏழை மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை வாங்கி எழிலரசிக்கு உதவினார்.

முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற வகுப்பாசிரியரிடம் சில மாணவர்கள் டியூஷன் சேர்ந்தனர், எழிலுக்கு கணிதம் மற்றும் ஆங்கில இலக்கணத்திற்கான டியூஷன் தேவை என்பதால் வகுப்பாசிரியர் கேட்டபடி மாதம் ருபாய் இருபத்தைந்து செலுத்தி ஒரு மாதம் டியூஷன் சேர்ந்தாள்.

இன்னும் பரீட்சைக்கு ஒரு மாதமிருந்தது, பதினைந்து நாட்கள் மட்டுமே டியூஷன் சொல்லி தர போவதாகவும் மற்ற பதினைந்து நாட்களில் எல்லா பாடங்களையும் மறுபடி படிக்க விடுமுறை என்றும் வகுப்பாசிரியர் கூறினார். பதினைந்து நாட்களுக்கு இருபத்தைந்து ருபாய் டியூஷன் பணம் கட்ட வேண்டும் என்று கூறினார் வகுப்பாசிரியர், எழிலினால் மீண்டும் டியூஷனுக்கு கட்டுவதற்கு பணம் இல்லை என்பதால் ஒரு மாதம் மட்டுமே டியூஷன் போக முடிந்தது.

பதினைந்து நாட்கள் படிப்பதற்காக கொடுக்கப்பட்டிருந்த விடுமுறையில் நன்றாக எல்லா பாடங்களையும் படித்து விட்டு தேர்வெழுதி வெற்றி பெற்றாள் எழில். தேர்வுகளுக்கான முடிவு வெளிவந்த சில தினங்களில் ராமு தனது தங்கையை எழிலின் வீட்டிற்க்கு அனுப்பி இருந்தான், புத்தகங்களை திருப்பி வாங்கி கொள்வதற்கு வந்திருந்த ராமுவின் தங்கையிடம் எதற்கு இந்த புத்தகங்கள் என்று விசாரித்தாள் எழில், பிளஸ் டு பரீட்சை எழுத போவதாக சொல்லி புத்தகங்களை வாங்கி சென்றாள் ராமுவின் தங்கை.

ஒரு வருடத்திற்குப் பின் ராமுவின் தங்கையை பார்த்த போது தேர்வு எழுதினாயா என்று விசாரித்தாள் எழில், தேர்வு எழுதி தோல்வியடைந்து விட்டதாகவும், திரும்பவும் எழுதும் விருப்பம் இல்லை என்று சொன்னாள் ராமுவின் தங்கை.

ராமுவின் பாட புத்தகத்தின் தோல்வி கதை மூலம் எழில் தெரிந்து கொண்ட செய்தி புத்தக ராசி என்பது ஏதும் கிடையாது நன்கு படித்து பரீட்சை எழுதுவதால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது.


* * * * * *

எழிலுக்கு கல்லூரிக்குச் சென்று பட்ட படிப்பு படிக்க ஆசை ஆனால் அதற்க்கு பண வசதி இல்லை என்பதால் தபால் வழியில் மேல் படிப்பு வரை படித்து முது கலை பட்டதாரி ஆகிவிட்டாள், பல இடங்களில் வேலைக்காக விண்ணப்பித்தும் ஒரு வேலையும் சரியானபடி கிடைக்காதது எழிலை மிகவும் துன்பத்தில் தள்ளியது.

வீட்டிலேயே டியூஷன் சொல்லி கொடுத்து வந்தாள் அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. எழிலின் அப்பாவிற்கு வர்ணம் பூசும் வேலை என்பதால் வர்ணத்தின் நெடியினை சுவாசித்து வந்ததால் காச நோயாளி ஆகி படுக்கையாகிவிட்டார். வறுமையின் கொடுமையால் உணவு இல்லாமல் எத்தனை நாள் தான் பட்டினியுடன் உழைக்க முடியும், எழிலின் அம்மாவினால் வீட்டு வேலைகளுக்கு போக முடியாமல் தலை சுற்றல் ஏற்ப்பட்டு வந்தது.

தன்னை ஆளாக்கிய பெற்றோருக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி தருவதற்கு கூட போதிய பணம் இன்றி மிகவும் கஷ்ட நிலைக்கு உள்ளானாள் எழில். பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பார்களே அது போல.

இந்த நிலையில், ரமேஷ் தாய் தந்தையற்ற இளைஞன், தென்னக ரயில்வேயில் குமாஸ்தாவாக வேலை பார்ப்பவன், தனது சம்பாத்தியத்தில் சேமித்த பணத்தில் தனது திருமணத்தை முடிக்க ஒரு நல்ல படித்த பெண்ணாக தேடி கொண்டு இருந்தவனுக்கு எழிலின் குடும்பத்திற்கு தெரிந்திருந்த ஒருவரின் மூலமாய் எழிலை திருமணம் பேசி முடித்தனர்.

எழிலின் திருமணத்திற்கு என்று ஒரு பைசா கூட சேர்த்து வைக்கவில்லை, பெண் நல்ல பெண்ணாக மட்டும் இருந்தால் போதும் என்று ரமேஷ் எழிலை அவளது வறுமையுடன் திருமணம் செய்து கொண்டான், அப்படித்தான் சொல்லி இருந்தார் ரமேஷை அறிமுகம் செய்து வைத்தவர்.

திருமணம் முடிந்த பின்னர் தான் தெரிந்தது ரமேஷுக்கு எழிலின் வறுமை பற்றி முழுவதுமாக சொல்லப்படவில்லை என்பது. ரமேஷ் எழிலின் வருமானத்தை பெருமளவில் எதிர்பார்த்தான். எழிலுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை, குறைந்த வருமானமும் தற்காலிகமான வேலை வாய்ப்புகளும் தான் கிடைத்தன, இதனால் பணப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது, குடும்பத்தில் நிம்மதி பறி போனது, படிப்பிருந்தும் வேலையின்றி வருந்துவோரின் பட்டியலில் எழிலின் பெயரும் சேர்க்கப்பட்டது தான் மிச்சம், எழிலின் வாழ்வில் கருமேகங்கள் சூழலாயின.

" பிச்சை புகினும் கற்கை நன்றே " என்னும் வாக்கிற்கேற்ப்ப படித்தும் விடியலை காண இயலாத எழில் திருமணத்தின் மூலம் வாழ்வின் துன்பக் கடலினுள் தூக்கி எறியப்பட்டாள்.