Author Topic: ~ தெரிந்துகொள்வோம் :- ~  (Read 620 times)

Online MysteRy

~ தெரிந்துகொள்வோம் :- ~
« on: August 28, 2014, 09:00:24 PM »
தெரிந்துகொள்வோம் :-




* ஜெர்மனியில் 65 வயதுக்கு மேற்பட்ட எல்லாருமே பஸ்ஸில் அரை டிக்கெட் வாங்கினால் போதும்.

* பிரான்ஸில் மேஜைத் துணி மேல் எதையும் சிந்திக் கறைபடுத்தாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு டிப்ஸ் கொடுக்கிறார்கள் ஹோட்டல் சர்வர்கள்.

* இங்கிலாந்தில் குளிர்காலத்தில் சாலைகளில் பனி உறைந்து போயிருக்கும்போது, பனிக்கட்டியை உருகி ஓடச் செய்யும் பொருட்டு அதன் மீது உப்பைத் தெளிப்பார்கள்.

* ரஷ்யாவில் குழந்தை பிறக்கும்போது அது ஆணா, இல்லை பெண்ணா என்று கேட்பதில்லை. எத்தனை கிலோ எடை என்றுதான் கேட்கிறார்கள்.

* வட அமெரிக்காவில் வாழும் மூஸ் எனும் மான் இனம் ஒவ்வொரு குளிர் காலத்திலும் தன் கொம்புகளை உதிர்த்து விடும். பின்னர் வசந்த காலத்தில் மறுபடியும் கொம்பு வளர்ந்து விடும்.

* ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையில் வசிக்கும் அல்பைன் ஐபெக்ஸ் என்ற மலை ஆடுகள் செங்குத்தான பாறைகளில் ஏறுவதில் தேர்ந்தவை. சுமார் 15,000 அடி உயரத்தில்தான் வசிக்கும்.

* நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் சுரப்பி, சில சிறுத்தைகளுக்கு மிக அதிகமாகச் சுரப்பதால் அவை கறுப்பு நிறத்தில் இருக்கும். அவற்றுக்கு கருஞ்சிறுத்தைகள் என்று பெயர்.

* எஸ்கிமோக்களின் வீடுகளை இக்ளூ என்பர். குளிர்காலத்தில் வெவ்வேறு பகுதிகளுக்கு வேட்டையாடச் செல்லும்போது, தாற்காலிகமாகக் கட்டிக் கொள்ளும் வீடுகள்தான் இக்ளூ எனப்படும். மற்ற நேரங்களில் திமிங்கல எலும்பு, விலங்குகளின் தோல், மரத்துண்டுகளைக் கொண்டு வீடு கட்டி, தரையில் புற்களைப் பரப்பிக் கொள்வர்.