Author Topic: ~ கொய்யாப்பழ மசாலா டிலைட் ~  (Read 657 times)

Offline MysteRy

கொய்யாப்பழ மசாலா டிலைட்



தேவையானவை: 
கொய்யாப்பழம் - 4,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2,
 பட்டை லவங்கம், ஏலக்காய் - தலா 2,
கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கிய தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். இதனை ஆறவிட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
மீண்டும் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து, பொரிந்தவுடன் அரைத்த விழுது சேர்த்து, நான்காக நறுக்கிய கொய்யாப்பழங்களை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்து, பச்சை வாசனை நீங்கியதும் இறக்கி, கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.
வித்தியாசமான சுவையில் அசத்தும் இந்தக் கொய்யாப்பழ மசாலா டிலைட்.