Author Topic: ~ சிந்தனை துளிகள்... ~  (Read 1636 times)

Offline MysteRy

~ சிந்தனை துளிகள்... ~
« on: May 20, 2014, 07:40:55 PM »
சிந்தனை துளிகள்...




* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.

* நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.

* உலக நன்மைக்காக அவசியமாயின் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள், தூய்மை உடையவன் தான், நல்ல சிந்தனையாளனாக, பகுத்தரவாளனாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஆகிறான்.

* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.
பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாத வனுக்குக் கவலை சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை..
பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்

நியாயத்திற்கு நன்மை உறுதி

* வேலை செய்யாமல் பிறரிடம் பணம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம். எவ்விதமான வேலையும் இல்லாமல் இருப்பவனைப் பார்ப்பது கூட, நமக்குத் தீமையை உண்டாக்கும்.

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #1 on: June 01, 2014, 05:55:56 PM »
சிந்தனை துளிகள்...




* மனதில் அச்சத்திற்கு இடம் அளிக்கக் கூடாது. உச்சிவானம் இரண்டாகப் பிளந்து நம் மீது விழுந்தபோதும் அச்சம் கொள்ளக்கூடாது.

* அன்பு உள்ள இடத்தில் அச்சத்திற்கு இடம் இருப்பது இல்லை. கவலை, சோர்வு, அச்சம் ஆகிய பண்புகள் அனைத்தும் அன்புணர்வால் அகற்றப்படுகின்றன.

* மனக் கட்டுப்பாட்டுடன் வாழ்தல், பிறர் நலம் வேண்டுதல், துன்பம் கண்டு இரங்குதல், இறைவனைப் போற்றுதல் இவையே ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள்.

* இருப்பது ஒரே தெய்வம் மட்டுமே. அதனையே ஆயிரமாயிரம் பெயர்களால் வணங்குகிறோம்.

* அன்பைக் காட்டிலும் சிறந்த தவநெறி வேறில்லை. அதனால் மக்கள் அனைவரும் அன்பு வழியில் வாழ்ந்தால் இன்பம் அனைத்தையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #2 on: June 02, 2014, 05:35:50 PM »
சிந்தனை துளிகள்...




1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #3 on: June 05, 2014, 07:22:00 PM »
சிந்தனை துளிகள்...




* நாம் செய்யும் தவறுகளுக்கு அனுபவம் என்னும் பெயர் சூட்டுகிறோம்.

* நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை

* பணக்காரன் ஆவதற்கு பணம் சேர்க்காமல் செலவுகளை குறைத்தாலே போதுமானது

* காலின் சறுக்கல் வலியைத் தரும். நாவின் சறுக்கல் ஆளையே கொன்றுவிடும்

* பகை பொறாமை இவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாகமீண்டும் உன்னை திரும்பி வந்து சேரும்

* ஒர் துளி பேனா மை பத்து லட்சம் பேரலை சிந்திக்க வைக்கும்

* பணக்காரனாக இருப்பதே போல பாசாங்கு செய்வதாலேயே சில பேர் ஏழையாகவிடுகிறார்ககள்

* நல்ல நண்பன் இல்லாதவன் காம்பில்லா மலரைப் போன்றவன்.

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #4 on: June 11, 2014, 07:52:45 PM »
சிந்தனை துளிகள்...




* நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சியை நண்பனாக்கிக் கொள்ளுங்கள்,அனுபவத்தை ஆலோசகராக்கிக் கொள்ளுங்கள், எச்சரிக்கை - மூத்த சகோதரனாய் இருக்கட்டும். நம்பிக்கை - அறிவு மிக்க பாதுகாவலராய் இருக்கட்டும்!

* நிலையான வெற்றியைப் பெறுவதற்கு உங்கள் கொள்கையிலும், செயல்முறையிலும் - நீங்கள் நிலையாக இருக்க வேண்டும்!

* வெற்றியால் நீங்கள் வலிமை பெற்று விடுவதில்லை. உங்கள் போராட்டங்களே உங்களை வலிமையுடையவராக்கும்.

* வாழ்க்கையின் துன்ப நிலைகளிலும் விட்டுவிடாமல் இருக்கிறீர்களே... அதுதான் வலிமை.

* யார், வாக்கு தவறாதவனோ, நேர்மையாய் சிந்திக்கிறவனோ, வெளிப்படையாய்பேசுகிறவனோ, மக்கள் அவனையே மதிக்கின்றனர். அவனிடம் நம்பிக்கை வைக்கின்றனர்!

* வாழ்க்கையை உருவாக்கப் பயன்படும் காலத்தை வீணடிக்காதீர்கள். உங்களால்முடிந்தவரை, ஒவ்வொரு கணத்தையும் பயனுடையதாக்குங்கள்

அது - அளவின்றி வழங்கப்படவில்லை நம் கைகளில்!

* சரியானதோர் திட்டம் சாலையின் வரைபடம் மாதிரி. உங்கள் இலக்கைச் சென்றடைய அதுவே சிறந்த வழி!

* செடிகள் பூப்பதற்குத் தேவை தரமான விதையும், தகுதியான மண்ணும்! நல்ல சிந்தனைகள் வளர்வதற்கும் அதுவே தேவை!

* அறிவாற்றலின் பயன் அரிதாகவே இனங் காணப்படுகிறது. அது, கடின காரியங்களையும் எளிதாக்கும் திறன்!

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #5 on: June 14, 2014, 09:29:37 PM »
சிந்தனை துளிகள்...




* மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடலும் நன்றாக இருக்கும். உடலை சுறுசுறுப்பாக்கினால் மனதில் உற்சாகம் நிலைக்கும்.

* அறிவை அகங்கார மாசு மூடியிருக்கிறது. இதை நீக்கி விட்டால் தெய்வசக்தியும், ஞானமும் மேலோங்கும்.

* உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மை உண்டானால் வாக்கிலும் ஒளியுண்டாகும்.

* எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று உண்மையாக வேண்டினால், கடவுளும் மனமிரங்கி அருள்புரிவார்.

* அறியாமை என்னும் விஷப்பூச்சியை மனதிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. இல்லாவிட்டால் இன்பம் அனைத்தும் காணாமல் போய் விடும்.

* இளம்வயதில் ஏற்படும் அபிப்ராயம் ஆற்றல் வாய்ந்தது. இதை மறப்பதோ, மாற்றுவதோ கடினம்.

* நெஞ்சில் ஈரமில்லாதவர்கள் கடவுளை அறிய முடியாது. இரக்க சிந்தனை இருந்தால் இறையருள் கைகூடும்.

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #6 on: June 15, 2014, 08:27:14 PM »
பொன்மொழிகள்...




* பகைவனால் ஏற்படும் தீமையைவிட அடக்கம் இல்லா மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது. -புத்தர்

* தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை. -பிராங்க்ளின்

* மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளும் அல்ல; இடையூறுகளும், துன்பங்களுமே.
-டபிள்யூ மேத்யூஸ்

* வெற்றியைவிட தோல்விதான் அதிக பாடங்களைக் கற்றுத் தருகிறது. -கார்ல் மெனிக்கர்

* உழைப்பு உடலை வலிமைப்படுத்தும். கஷ்டங்கள் உள்ளத்தை வலிமைப்படுத்தும். -பிளெமிங்

* உங்களைப் பார்த்து மற்றவர்கள் இரக்கப்படுவதைவிட பொறாமைப்படுவதே மேல். -டபிள்யூ. எச். ஆலன்

* பரிசுத்தமான மனசாட்சி உள்ளவன், அடக்கமாகவும், அமைதியாகவும் இருப்பான். -தாமஸ் அ. கெம்பிஸ்

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #7 on: June 28, 2014, 08:37:17 PM »
சிந்தனை துளிகள்...




* மாற்றம் என்பது இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. தங்கள் மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது!

* வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள்: உண்மை, நேர்மை, அடக்கம்,அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை!

* அபாய நிலைகளை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். அபாயங்களை எதிர்நோக்குவதன் மூலம் நாம் துணிச்சலாய் இருக்கக் கற்றுக் கொள்கிறோம்!

* இணக்கமற்ற சூழ்நிலைகளில் இருந்து வெற்றியை ஈட்டுவதற்காக இடைவிடாதுபோராடுவதும் ஓய்வின்றிப் போரிடுவதுமே மிகப்பெரிய சாதனைகளுக்கு நீங்கள்கொடுக்கிற விலை.

* உங்கள் குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுங்கள். அந்நிலையில் அது காணத்தக்கதாயும், உணரத்தக்கதாயும் இருக்கும்! அதன்பிறகு அது வெறும் எண்ணாயிருக்காது... ஏற்கப்பட்ட பொறுப்பாகி விடும்!

* தகுதியான ஒன்றைச் செய்வதற்கு தகுதியான சூழ்நிலை வரட்டும் என்றுகாத்திருக்காதீர்கள். சாதாரண சூழ்நிலைகளையே தகுதியானதாக்கிக் கொள்ளுங்கள்.

* மதிப்புமிக்க எதுவும் எளிதாய் கைக்கு வந்து விடாது. உழையுங்கள்- தொடர்ந்துஉழையுங்கள்... கடினமாய் உழையுங்கள்... அதுவே, நிலையான பலன்களைத் தரும்!

* வாழ்க்கை, முடிவற்ற வாய்ப்புகளைக் கொண்டதாயிருக்கிறது. நம் அச்சங்களைக்கடப்பதன் மூலம், நாம் கற்றுணர முடியுமாயின், நம்முடைய இயற்கைத் தன்மையைநம்மால் வெளிப்படுத்த இயலுமாயின் வாய்ப்புகள் முடிவற்றவை!

* பயன்படுத்தப்படாத துணிவு தன்னால் குறைந்து விடும். பயன்படுத்தப்படாதபொறுப்புணர்வும் படிப்படியாய் மங்கி விடும். பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு பாழாகிப் போய் விடும்!

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #8 on: July 03, 2014, 08:14:17 PM »
சிந்தனை துளிகள்...




* பல தன்மைகள் வாய்ந்த நபர்களின் தொடர்பை விட, சில நல்ல புத்தகங்களின் உறவு நன்மையை அளிக்கும்.

* குழந்தைகளை வளர்க்கும்போது தான், உன் பெற்றோரின் அருமையை உன்னால் உணர முடியும்.

* பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வீதிகளின் வழியே நடப்பவன் தோல்வி என்ற வீட்டையே அடைவான்.

* சரியாக சிந்திக்கத் தெரிந்து கொண்டால், உலகத்தையே மாற்றி விடலாம்.

* சோம்பேறி, காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறியை மதிப்பதில்லை.

* கண்கலங்கி கவலைப்படாதீர்கள்; கவலைப்படுவதால் எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.

* `முடியாது', `நடக்காது' என்ற வார்த் தைகளை எப்போதும் சொல்லக் கூடாது.

* மூளையை பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென் றால் துருபிடித்து விடும்.

* கொடுப்பதற்கும், பெறுவதற்கும் உரிய விலைமதிப்பில்லாத பரிசு, அன்பு.

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #9 on: July 16, 2014, 07:46:59 PM »
சிந்தனை துளிகள்...




* பழிக்குப்பழி வாங்கியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் மனிதர் யாருக்கும் கிடையாது.

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் உயர்ந்த குணம், குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

* நியாயத்தராசை வைத்திருப்பவனின் கையில் ஆள்பலம், சொல்வலிமை, பணம் போன்ற எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

* பிச்சை எடுப்பவனிடம் மான உணர்வு இருக்காது. உள்ள உறுதி மிக்கவன் யாரிடமும் இலவசமாக எதையும் பெற விரும்புவதில்லை.

* வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு. முதலில் தன்னம்பிக்கை வேண்டும். அடுத்தபடியாய் உங்களுக்கு
இறை நம்பிக்கை கூட அவசியம் இல்லை..
உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

* உடலை வெற்றி கொள்ள முயலுங்கள். அது எப்போதும் நீங்கள் இட்ட கட்டளைக்குப் பணியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

* அகங்காரத்தைக் களைந்தால் நல்ல சிந்தனையும் பகுத்தறிவும் , ஞானமும் ஏற்படும். அகங்காரத்தைக் களைந்ததால் தான் புத்தருக்கு ஜானம் பிறந்தது,

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்... ~
« Reply #10 on: August 23, 2014, 08:07:51 PM »
சிந்தனை துளிகள்...




வார்த்தை

* ஒரு கவனக் குறைவான வார்த்தை ,சர்ச்சையில் முடியும்.

* ஒரு கடுமையான வார்த்தை ,வாழ்க்கையை முறிக்கும்.

* ஒரு கசப்பான வார்த்தை ,வெறுப்பை வளர்க்கும்.

* ஒரு கொடுமையான வார்த்தை,துடித்துச் சாகடிக்கும்.

* ஒரு இனிமையான வார்த்தை,நல வாழ்வைக் கொடுக்கும்.

* ஒரு சந்தோசமான வார்த்தை,ஒளியைக் கொடுக்கும்.

* ஒரு நேரமறிந்து கூறும் வார்த்தை,கடுமையைத் தணிக்கும்.

* ஒரு அன்பான வார்த்தை பாசத்தை வளர்க்கும்.