Author Topic: ~ சுறா புட்டு ~  (Read 430 times)

Offline MysteRy

~ சுறா புட்டு ~
« on: August 16, 2014, 02:21:49 PM »
சுறா புட்டு

தேவையானவை:
வேக வைத்த சுறா மீன் துருவல் - கால் கிலோ, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 6, இஞ்சி - பூண்டு விழுது - அரை கப், தேங்காய் (துருவியது) - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், சோம்புத்தூள் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 150 மில்லி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், சோம்புத்தூள், துருவிய சுறாமீன், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் எலுமிச்சைச்சாறு ஊற்றி, துருவிய தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.