கோழி பால் கறி
தேவையானவை:
கோழி இறைச்சி - 250 கிராம், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - 100 மில்லி, காளான் - 10, வெண்ணெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், கேரட் - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி விழுது - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கோழி இறைச்சியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். காளான், கேரட், வெங்காயத்தாள் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி கோழி இறைச்சியுடன் சேர்க்கவும். தக்காளி விழுதை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து பாதியளவு பாலை அதில் ஊற்றி வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் இளகி கரைந்ததும், மீதமுள்ள பால், மைதா மாவு, சோள மாவு சேர்த்துக் கிளறவும். வெண்ணெய் - மாவு கலவை கூழ் போல் பக்குவம் வந்த பின் இறைச்சிக் கலவையை அதில் சேர்த்து நன்கு கிளறி, குறைந்த தீயில் மூடிவைக்கவும். சிறிது நேரம் கழித்து இறக்கிப் பரிமாறவும்.