Author Topic: ~ சோளப்பொரி உருண்டை ~  (Read 467 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சோளப்பொரி உருண்டை ~
« on: August 13, 2014, 01:38:33 PM »
சோளப்பொரி உருண்டை



தேவையானவை:
 நாட்டு சோளப் பொரி - 2 கப், பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
சோளப்பொரியை மண் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சவும். பிறகு, இறக்கி வைத்து அதில் தேங்காய், ஏலக்காய்த்தூள், பொரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சிறிது ஆறியதும், கையில் நெய்யை தொட்டுக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். முதலில் வேக வேகமாக எல்லாவற்றையும் உருண்டைகளாகப் பிடித்துவிட்டு, பிறகு நிதானமாக ஒவ்வொரு உருண்டையையும் அழுத்தி விடவும்.