Author Topic: ~ சிந்தனைத்துளிகள்........ ~  (Read 1088 times)

Offline MysteRy

சிந்தனைத்துளிகள்........




Ø இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக்கூட பிடிக்க முடியாது.

Ø சீரிய எண்ணங்களை செயல்படுத்தும் போது அவை சிறந்த செயலாகின்றன.

Ø நாம் முன்னேற நட்பு ஒரு வாயிற்படி.

Ø ஒரு பெண் ரகசியமாக பாதுகாப்பது அவள் வயது ஒன்றைத் தான்.

Ø பெண் முடிகின்ற போது தான் சிரிப்பாள். ஆனால் நினைத்த போது அழுவாள்.

Offline MysteRy

Re: ~ சிந்தனைத்துளிகள்........ ~
« Reply #1 on: July 23, 2014, 06:50:44 PM »
சிந்தனைத்துளிகள்........




Ø அன்பும் மரியாதையும் கொண்டிருப்பவன் இந்த உலகில் எதையும் சாதித்துவிடுவான்.

Ø துணிவு இல்லையேல் வாய்மையில்லை. வாய்மையில்லையேல் பிற அறங்கங்களும் இல்லை.

Ø ஆபத்துக்கு உதவுவது சொந்தம் இல்லை, நட்புதான்.

Ø நிலமைக்கு தக்கபடி நடந்துகொள். அதுவே புத்திசாலித்தனம்.

Ø பயன் கருதி அன்பு காட்டுவதைவிட காட்டாமல் இருப்பதே மேல்.

Offline MysteRy

Re: ~ சிந்தனைத்துளிகள்........ ~
« Reply #2 on: August 06, 2014, 07:25:04 PM »
சிந்தனைத்துளிகள்........



* பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.

* அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.

* உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.

* தன்னை அறிவது அறிவு,தன்னை மறப்பது மடமை.

* ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.

Offline MysteRy

Re: ~ சிந்தனைத்துளிகள்........ ~
« Reply #3 on: August 16, 2014, 10:33:41 PM »
சிந்தனைத்துளிகள்........




* நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.

* சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது.

* நம்பிக்கை நல்ல வழி காட்டும் – ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.

* பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை வெளிப்படுத்துகிறாள்.

* நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.

Offline MysteRy

Re: ~ சிந்தனைத்துளிகள்........ ~
« Reply #4 on: October 07, 2014, 07:50:14 PM »
சிந்தனை துளிகள்.....



* மனதில் அச்சத்திற்கு இடம் அளிக்கக் கூடாது. உச்சிவானம் இரண்டாகப் பிளந்து நம் மீது விழுந்தபோதும் அச்சம் கொள்ளக்கூடாது.

* அன்பு உள்ள இடத்தில் அச்சத்திற்கு இடம் இருப்பது இல்லை. கவலை, சோர்வு, அச்சம் ஆகிய பண்புகள் அனைத்தும் அன்புணர்வால் அகற்றப்படுகின்றன.

* மனக் கட்டுப்பாட்டுடன் வாழ்தல், பிறர் நலம் வேண்டுதல், துன்பம் கண்டு இரங்குதல், இறைவனைப் போற்றுதல் இவையே ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள்.

* இருப்பது ஒரே தெய்வம் மட்டுமே. அதனையே ஆயிரமாயிரம் பெயர்களால் வணங்குகிறோம்.

* அன்பைக் காட்டிலும் சிறந்த தவநெறி வேறில்லை. அதனால் மக்கள் அனைவரும் அன்பு வழியில் வாழ்ந்தால் இன்பம் அனைத்தையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.