Author Topic: ~ பப்பாளி பாசந்தி ~  (Read 457 times)

Offline MysteRy

~ பப்பாளி பாசந்தி ~
« on: July 28, 2014, 09:34:06 PM »
பப்பாளி பாசந்தி



தேவையானவை:
மீடியமான பப்பாளிப்பழம் - 1, வெல்லம் - ஒரு கப், கெட்டியான தேங்காய்ப் பால் - அரை கப், மைதா - 2 டீஸ்பூன், ரவை - 4 டீஸ்பூன், முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:
பழுத்த பப்பாளிப்பழத்தை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கி, மிக்ஸியில் கூழாக அரைக்கவும். ரவையை நெய்யில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைக்கவும். முந்திரியை பொன்னிறமாக வறுத்து, பொடித்துக் கொள்ளவும். தேங்காய்ப் பாலில் மைதா, ரவையைக் கரைக்கவும். கடாயில் வெல்லத்தை பொடித்துப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இந்த வெல்லப் பாகில் பப்பாளிக்கூழ், தேங்காய்ப் பால் கலவையை சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கிளறவும். எல்லாம் கலந்து திரண்டு வரும்போது நெய், முந்திரிப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.