Author Topic: ~ அவல் பிரியாணி! ~  (Read 449 times)

Offline MysteRy

~ அவல் பிரியாணி! ~
« on: July 19, 2014, 10:06:36 PM »
அவல் பிரியாணி!



தேவையானவை:
கெட்டி அவல் - ஒரு கப், கடலை மாவு - கால் கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - 1, பிரிஞ்சி இலை - ஒன்று, ஏலக்காய், லவங்கம் - தலா 2, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பட்டை, லவங்கம், ஏலக்காயைத் தட்டிக்கொள்ளவும். சோம்பை தூளாக்கிக் கொள்ளவும். அவலை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கழுவி, நீரை வடிகட்டி, உப்பு, சோம்புத்தூள், கடலை மாவு சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கி... இஞ்சி, பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து சிவக்க வறுக்கவும். அதனுடன் அவல் கலவையை சேர்த்துக் கிளறவும். வெந்ததும், கொத்தமல்லித் தழையை சேர்த்துக் கிளறி, கடைசியாக எலுமிச்சைச் சாறு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
இந்த அவல் பிரியாணியை, தக்காளிக் குழம்போடு சூடாகச் சாப்பிட்டால்... சுவையோ சுவை!