Author Topic: 'ஏசி' அறையில் இருப்பவர்கள் உஷார்!  (Read 2041 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
   ஏசி அறையில் இருப்பவர்கள் உஷார்!
    டிஹைட்ரேஷன் எனும் உடம்பில் நீர்ச்சத்து குறையும் தன்மை போதுமான அளவு நீர் குடிக்காத அனைவருக்கும் வரும். குறிப்பாக, 'ஏசி' அறையில் நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். 'ஏசி' குளிர்ச்சியாக இருப்பதால்
    அந்தச் சூழலில் தண்ணீர் குடிக்கத் தோன்றாது. உடம்பின் நீர்த் தேவையும் நம்மால் உணர முடியாது.கோடையில் அடுத்த பிரச்னை நோய்த் தொற்று.

    சத்தான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்த் தொற்றை விரட்டலாம். இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களான தர்ப்பூசணி, வெள்ளரி, கிர்னி போன்றவற்றை முடிந்த அளவு தினமும் சாப்பிட வேண்டும். உடம்பில் நீர்ச்சத்து குறைந்து விட்டால், எதிலும் கவனம் இருக்காது.சாதாரண
    நாட்களிலேயே ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் நீர் ஒருவருக்கு தேவை. வெயில் காலத்தில் இதை விட கூடுதலாக ஒரு லிட்டர் குடிக்க வேண்டும். தண்ணீர் போன்று சிறந்த திரவ ஆகாரம் வேறு எதுவும் இல்லை.அதிகமாக வியர்வைவெளியேறும் போது, உடம்பில் சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட் ரோலைட்ஸ்அளவு கணிசமாகக் குறைந்து விடும். இதில் பொட் டாசியம் குறைந்தால் இதயத் துடிப்பில்
    மாற்றம் ஏற்படும். வயதானவர்கள் கோடைக் காலத்தில் இறப்பதற்கு இதுவே காரணம். மோர், இளநீர் போன்றவற்றில் எலக்ரோலைட்ஸ் அதிகம். வெயில் காலத்தில் உப்பு சாப்பிடக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. அது தவறு. மாங்காயைத் தவிர்த்து, மாம்பழங்களை அதிகமாகச் சாப்பிடலாம்.



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வெப்ப வலைய நாடுகள்தான் இதை அதிகமாக பயன் படுத்துகின்றார்கள் எனவே அவர்கள் இதை வாசித்து பயன் அடைய வேண்டும் ... நல்ல தகவல் சுருதி
                    

Offline RemO

thanks shur
nala thagaval
ini konjam ushara iruken