Author Topic: ~ 30 வகை நம்ம வீட்டு சமையல்!! ~  (Read 1788 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை நம்ம வீட்டு சமையல்!! ~
« Reply #30 on: July 08, 2014, 10:52:26 AM »
டாங்கர் பச்சடி



தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 100 கிராம், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை மிக்ஸியில் நைஸாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வும். மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடுகு, சீரகத்தை எண்ணெயில் தாளித்து சேர்த்துக் கலந்து, பரிமாறவும்.