Author Topic: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~  (Read 2683 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #15 on: June 19, 2014, 02:47:07 PM »
சுனந்தாலு



தேவையானவை:
 உளுத்தம்பருப்பு - ஒரு கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய முந்திரி - 10.

செய்முறை:
பொடியாக நறுக்கிய முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறவைத்து, மெஷினில் கொடுத்து அல்லது மிக்ஸியில் போட்டு நைஸாக பொடிக்கவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு நெய்யை உருக்கி, அது சூடாக இருக்கும்போதே கலந்து வைத்த மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #16 on: June 19, 2014, 02:51:11 PM »
கிரிஸ்பி பட்டர் முறுக்கு



தேவையானவை:
 அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு - 50 கிராம், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து, தேவையான நீர் சேர்த்து பிசைந்து, முள்ளு முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.
வாயில் போட்ட உடனே கரையும் இந்த பட்டர் கிரிஸ்பி முறுக்கு.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #17 on: June 19, 2014, 06:18:32 PM »
வெஜ் ஸ்பிரிங் ரோல்



தேவையானவை:
மைதா மாவு, நவதானிய மாவு (மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - தலா அரை கப், முளைகட்டிய நவதானியம் (பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரை, கோஸ், பாலக்கீரை (சேர்த்து) - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய நவதானியத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.  உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். மைதா மாவு, நவதானிய மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசையவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய கீரைகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, மசித்த உருளை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு இறக்கி, ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். இதன்மேல் நவதானிய உருண்டையை வைத்து சற்று இறுக்கமாகச் சுருட்டவும். பின்னர் அதன் ஓரத்தை தண்ணீரால் ஒட்டி விடவும். இதுதான் ஸ்பிரிங் ரோல். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஸ்பிரிங் ரோலைப் போட்டு பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #18 on: June 19, 2014, 06:20:58 PM »
கிரெய்ன்ஸ் ஸ்டஃப்டு பன்



தேவையானவை:
வட்டமான பன் - 4, முளைகட்டிய நவதானியம் ( பெரிய மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப் வெங்காயம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 5, வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,  கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், சீரகம், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - கால் கப், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முளைகட்டிய நவதானியத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும். புளியை கெட்டியாகக் கரைக்கவும். பச்சை வேர்க்கடலை, வறுத்த எள், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, வேர்க்கடலை விழுது, புளிக்கரைசல், உப்பு, தனியாத்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, கொப்பரைத் துருவல் தூவி இறக்கவும். பன்னை பாதியாக வெட்டி வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து, தயாரித்து வைத்த கலவையை நடுவில் வைத்து பரிமாறினால்... சாப்பிடுபவர்களிடமிருந்து வரும் வார்த்தைகள்... 'ஆஹா... ஓஹோ... பேஷ் பேஷ்’தான்!

குறிப்பு:
பன் துண்டுகளின் நடுவில் மிகவும் மெல்லியதாக, வட்டமாக 'கட்’ செய்த தக்காளி, குடமிளகாயையும் வைக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #19 on: June 19, 2014, 06:22:24 PM »
ஸ்பெஷல் மிக்ஸர்



தேவையானவை:
கடலை மாவு - 100 கிராம், வேர்க்கடலை, அவல் - தலா 100 கிராம், பல்லு பல்லாக நறுக்கிய கொப்பரைத் தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு - 10, முந்திரி (பாதியாக உடைக்கவும்) - 10 சர்க்கரை பொடி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வேர்க்கடலை, அவல், நறுக்கிய கொப்பரைத் தேங்காய், பாதாம் பருப்பு, முந்திரி ஆகியவற்றை எண்ணெயில் தனித்தனியே பொரித்து எடுக்கவும். கடலை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண் ணெயில் பிழிந்து மொறுமொறு வென எடுக்கவும். இதனுடன் எண்ணெயில் பொரித்த பொருட்கள், உலர்திராட்சை சேர்த்துக் கலந்து, சர்க்கரை தூவிக் கிளறி பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #20 on: June 19, 2014, 06:23:38 PM »
சீஸ் சேமியா டிலைட்



தேவையானவை:
சேமியா - ஒரு கப், சீஸ் - 2 சிறிய துண்டு கள், மைதா - கால் கப், வெங் காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, வெங்காயத்தாள் - அரை கட்டு, பனீர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சேமியாவை வறுத்து, தண்ணீர் சேர்த்து, வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து உதிர்க்கவும். சீஸை துருவவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பனீரை துருவிக்கொள்ளவும். இவற்றுடன் மைதா, உப்பு சேர்த்து ஒன்றாக பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதனை தக்காளி சாஸுடன் சுடச்சுட பரிமாறினால்... சுவை 'ஜோர் ஜோர்’தான்!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #21 on: June 19, 2014, 06:24:50 PM »
சீஸ் ரஸ்க் டிக்கி



தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், சிறிய சீஸ் துண்டுகள் - 3 (துருவவும்), துருவிய பனீர் - சிறிதளவு, ரஸ்க் தூள் - தேவையான அளவு, பால் - அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசிக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் வெண்ணெயை விட்டு, சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவை சேர்த்து வதக்கி, பாலை ஊற்றி, அடுப்பை சிறுதீயில் வைத்துக் கிளறவும். கலவை சற்று கெட்டியானதும் இறக்கி... உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, துருவிய சீஸ், துருவிய பனீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவோடு சிறிது நீர் சேர்த்து கரைக்கவும். உருளை - சீஸ் கலவையை விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #22 on: June 19, 2014, 06:26:05 PM »
டிரம்ஸ்டிக் கட்லெட்



தேவையானவை:
முருங்கைக்காய் - 3, உருளைக்கிழங்கு - 3, இஞ்சி - பச்சை மிளகாய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டுகள் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடிக்கவும். முருங்கைக்காயை நறுக்கி, வேகவைத்து, சதையை மட்டும் வழித்தெடுக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, பிரெட் தூள், கொத்தமல்லி, தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசையவும். இதை சின்ன சின்ன கட்லெட்டுகளாகத் செய்து, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக எடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #23 on: June 19, 2014, 06:27:25 PM »
ஸ்பெஷல் தயிர் வடை



தேவையானவை:
முழு வெள்ளை உளுந்து - ஒரு கப், கெட்டித் தயிர் - 2 கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, பாதாம், முந்திரி - தலா 8, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உளுந்தை அரை மணி நேரம் ஊறவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து, மாவு பொங்கி வர ஆட்டி எடுக்கவும். தயிரை நன்கு கடைந்து அதில் பாதியளவு எடுத்து... பால், சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும். முந்திரி, பாதாம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் சிறிதளவு உப்பு, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அதை பால் - தயிர் கலவையில் 5 நிமிடம் ஊறவைத்து எடுத்து, ஒரு அகலமான தட்டில் வைக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடம் முன்பு அதன் மேல் முந்திரி - தயிர் கலவையை ஊற்றி, மேலே சீரகத்தூள், மிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #24 on: June 19, 2014, 06:28:34 PM »
மைதா ரவுண்ட்



தேவையானவை:
 மைதா மாவு - அரை கிலோ, பொட்டுக்கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெள்ளை எள், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - கால் கப், உடைத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
மைதாவை நீர் தெளித்துப் பிசிறி, ஆவி யில் வேகவிட்டு எடுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, கடலைப்பருப்பு, வெள்ளை எள், வேர்க்கடலை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் தேங்காய்ப் பால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, மெல்லிய தான சின்னச் சின்ன வட்டங்க ளாக தட்டி, சூடான எண்ணெ யில் பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #25 on: June 19, 2014, 06:29:54 PM »
முள்ளங்கி புர்ஜி



தேவையானவை:
 வெள்ளை முள்ளங்கி - 4, பொட்டுக்கடலை மாவு - அரை கப், பிரெட் தூள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 6, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு - ஒன்று, பூண்டு - 2 பல், பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோல் உரித்த சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், பட்டை, கிராம்பு, பூண்டு, பெருஞ் சீரகம் ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை தோல் சீவி,    துருவி, நீரைப் பிழிந்துவிடவும். அதனுடன் பிரெட் தூள், அரைத்த விழுது, தேவையான உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கவும். இந்த உருண்டைகளை பொட்டுக்கடலை மாவில் போட்டு நன்கு புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #26 on: June 19, 2014, 06:31:05 PM »
ஸ்பிரவுட் டிக்கி



தேவையானவை:
 முளைகட்டிய பயறு கலவை (பெரிய மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், ரஸ்க் தூள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு - தலா கால் கப்,  எண்ணெய். உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். முளைகட்டிய பயறு வகைகளுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகெரப்பாக அரைக்கவும். அதில் ரஸ்க்தூள் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவுடன் சிறிது உப்பு மற்றும் கொஞ்சம் நீர் சேர்த்து பஜ்ஜி மாவு படத்தில் கரைக்கவும். உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #27 on: June 19, 2014, 06:32:22 PM »
பீட்ரூட் கேஷ்யூ கட்லெட்



தேவையானவை:
பீட்ரூட் - கால் கிலோ,  உருளைக்கிழங்கு - 3, கடலை மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, முந்திரி - 10, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் - 6 (பொடித்துக்கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். முந்திரியை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், துரு விய பீட்ரூட், தேவையான உப்பு, பொடித்த முந்திரி சேர்த்து வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக்கி, வேண்டிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்துகொள்ளவும். கடலை மாவுடன் கொஞ்சம் நீர், சிறிதளவு உப்பு சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். செய்து வைத்த கட்லெட்டுகளை கடலை மாவு கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #28 on: June 19, 2014, 06:33:33 PM »
மஷ்ரூம்   ஆலு ரெனடி



தேவையானவை:
காளான் - 100 கிராம் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவிட்டு மசித்துக் கொள்ளவும்), கேரட் - ஒன்று (துருவவும்), பிரெட் ஸ்லைஸ் - 8, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
நறுக்கிய காளான், துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டவும். பிரெட் ஸ்லைஸை சிறிதளவு உப்பு கலந்த நீரில் நனைத்து, உடனே  பிழிந்து  நடுவே மஷ்ரூம் உருண்டை   களை  வைத்து, அப்படியே  மூடி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226343
  • Total likes: 28837
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! ~
« Reply #29 on: June 19, 2014, 06:35:10 PM »
பனீர் பஜ்ஜி



தேவையானவை:
பனீர் - கால் கிலோ (விரல்நீளத் துண்டுகளாக, சற்று மெல்லியதாக நறுக்கவும்), கடலை மாவு - ஒரு கப், மைதா மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
எண்ணெய், பனீர் துண்டுகள்  நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொஞ்சம்  நீர் ஊற்றிக் கரைக்கவும். இந்தக் கரைசலில் பனீர் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.