Author Topic: ~ உலகம் புகழும் பொன்மொழிகள்:- ~  (Read 633 times)

Online MysteRy

உலகம் புகழும் பொன்மொழிகள்:-




1. ஒருவன் தனக்குத்தானே பேசிக் கொள்வதே சிந்தனை! - ஸ்பெயின்

2. கையின் வலிமையைவிட சிந்தனையின் வலிமை அதிகம்! - கிரீஸ்

3. நிறையச் சிந்தனை செய்யுங்கள்; குறைவாகப் பேசுங்கள்; அதிலும் குறைவாக எழுதுங்கள்! - பிரான்ஸ்

4. மனிதன் ஒரு நாணல் போன்றவன்; இயற்கையில் உள்ளவைகளில் மிகவும் பலவீனமானவன்; ஆனால் சிந்திக்கும் நாணல் அவன்! - பாஸ்கல்

5. உயர்ந்த சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் பெருஞ்செயல்களாகும்! - இங்கிலாந்து

6. ஆரம்பிக்கும்போதே முடிவை சிந்தனை செய்! - பல்கேரியா

7. வாழ்க்கை என்ற நூலில் ஆழ்ந்த சிந்தனைகள் என்ற மணிகள் கோர்த்த மாலை உடையவனுக்கு வேறு ஜெபமாலை தேவையில்லை! - பாரசீகம்

8. இழிவான சிந்தனைகளை எண்ண வேண்டாம்! - கன்ஃபூசியஸ்

9. நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்! - லத்தீன்

10.சிந்தித்துச் செயல்படு; செயலில் இறங்கியபின் சிந்தனை செய்யாதே! - திருவள்ளுவர்.