Author Topic: ~ காய்ச்சல், ஜலதோஷம், இருமல் குணமாக - இயற்கை வைத்தியம்:- ~  (Read 483 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
காய்ச்சல், ஜலதோஷம், இருமல் குணமாக - இயற்கை வைத்தியம்:-




சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் இடித்து வைத்துக்கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின்போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்திவரவேண்டும். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்பாட்டுக்கு வரும்.

துளசி:

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச்சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். சளி இருமல் மாயமாய் மறைந்துவிடும்.