Author Topic: ~ கடல் வாழ் நட்சத்திர மீன்கள் பற்றிய தகவல்கள்:- ~  (Read 812 times)

Offline MysteRy

கடல் வாழ் நட்சத்திர மீன்கள் பற்றிய தகவல்கள்:-




கடலில் அதிகளவில் கணப்படுபவை கடல் நட்சத்திரமீன்கள். இதன் உடலின் மையப்பகுதி வட்டம் எனப்படும். இதிலிருந்து நீளும் ஐந்து கதிர்கள் ஆரங்கள் எனப்படும். இவை படிப்படியாகக் குறுகி நுனியில் கூர்மையாக இருக்கும். எல்லா ஆரங்களும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன. வட்டத்துடன் சேர்ந்து இவை சரியான ஐங்கோண நட்சத்திரமாக உறுவாகின்றன. எனவே கடல் நட்சத்திங்களின் உடல்கள் ஐந்து ஆர சமச்சீர் கொண்டவை.

இவை, தோலில் உள்ள சுண்ணாம்புத் தகடுகளின் பகுதிகள். இத்தகடுகளே வட்டம், கதிர்கள் ஆகியவற்றின் கடினமாக வெளிச் சட்டகம் ஆகின்றன. நீர்க்குழாய் மண்டலமும் கடல் நட்சத்திரத்தில் உள்ளது.

இது, வடிகட்டும் தட்டில் இருந்து தொடங்குகிறது. இந்த தட்டில் உள்ள அதிகப்படியான துளைகளின் வழியாகக் கடல் நீர் வடிகட்டப்பட்டு நீர்க்குழாய் மண்டலத்தை நிரப்புகிறது. முதலில் சிறிய கற்கால்வாய் வழியே வந்து நீர், வளையக் கால்வாயை அடைகிறது. இந்த கால்வாயில் இருந்து ஆரத்துக்கு ஒன்றாக ஐந்து ஆரக்கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன. இந்தக் கால்வாய்கள் வழியே நீர், கால்களின் உட்புறத்தை அடைகிறது.

நீர்க்குழாய் மண்டலம், இயக்கத்துக்குப் பயன்படுகிறது. காலில் நீர் அழுத்தும்போது அது நீண்டு கடலின் அடித்தரையை உறிஞ்சிப் பற்றிக் கொள்கிறது. கால்கள் சுருங்கும்போது நீர் கால்வாயில் திரும்பச் செலுத்தப்படுகிறது. கடல் நட்சத்திரத்தின் உடல், கால் பற்றியிருக்கும் இடத்துக்கு இழுக்கப்படுகிறது.

கடல் நட்சத்திரங்கள் உணவு உட்கொள்ளும் முறை வித்தியாசமானது. அவை வேட்டை.ாடி உண்ணும் உயிரினங்கள், மெல்லுடலிகளாகும்.

ஒரு மெல்லுடலியின் ஓட்டு மூடிகளைக் கால்களால் உறிஞ்டிப் பற்றிக் கொண்டு கடல் நட்சத்திரம் அவற்றை ஒருபுறமாக இழுக்கத் தொடங்கும். மெல்லுடலியின் மூடுதசைகள் உடனேயே சிப்பியை மூடிக் கொள்ளும். ஆனால், பின்பு களைத்துப் போகும். கடல் நட்சத்திரத்தின் பல கால்களோ ஒன்று மாற்றி ஒன்றாக வேலை செய்வதால் அது களைப்படுவதில்லை.

முடிவில் கடல் நட்சத்திரமே மெல்லுடலியை வெல்லும், மெல்லுடலியின் ஓட்டு மூடிகள் திறந்து கொண்டதுமே கடல் நட்சத்திரம் தன் இரைப்பையை உள்வெளியாகத் திருப்பி நீட்டி மூடிகளுக்கு இடையே புகுத்தும். இரைப்பையின் ஜீரண நீர், மெல்லுடலியின் உடலை அதன் சிப்பிக்கு உள்ளேயே ஜீரணிக்கும்.

கடல் நட்சத்திரத்தின் இந்த ஊட்டமுறை காரணமாக, மெல்லுடலியானது ஓடுகளால் எவ்வளவுதான் உறுதியாக மூடப்பட்டிருந்தாலும் தப்பமுடியாமல் அதற்கு இறையாகி விடும். கடல் நட்சத்திரம் அதை ஓடுகளுக்கு உள்ளேயே ஜீரணித்து உட்கொண்டு வெற்று ஓடுகளை விட்டுச் செல்லும்.