Author Topic: ~ நெய்யின் மருத்துவ பயன்கள்:- ~  (Read 428 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227463
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நெய்யின் மருத்துவ பயன்கள்:-




தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள். உடல் ஆரோக்கியம் பெற ஏழு விளக்கங்கள் கீழே.

• தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

• உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

• வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.

• நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை, அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது, அதனால் நெய்யில் மாற்றம் ஏற்படாது.

• நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.

• விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்,

• உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். தினம் நாம் உணவில் நெய் சேர்த்து உடல் ஆரோக்கியம் பெறலாம்.