Author Topic: ~ எளிய பாட்டி வைத்தியம் :- ~  (Read 703 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227462
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எளிய பாட்டி வைத்தியம் :-




மூக்கடைப்பு

தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

துயிலிக் கீரை சாறில் மாசிக்காயை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூக்குப் பொடி போல் மூக்கில் உறிஞ்சிக் கொண்டால், மூக்கடைப்பு நீங்கும்.

மூக்கில் இருந்து இரத்தம் வடிதல்

பிரண்டை வதக்கி சாறு எடுத்து இரண்டு துளிகளைக் காதில் விட்டால், காது வலி நீங்கும். மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் குணமாகும்.

மூச்சுத் திணறல்

வங்கார வள்ளைக் கீரைச் சாறில் சுக்கு பவுடரைக் குழைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், இரத்த அழுத்தமும் குணமாகும்.

பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவில் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.

குஷ்ட நோய்கள்

வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதின்னாப்பாலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட குஷ்ட நோய்களும் குணமாகும்.

கைகால் எரிச்சல்

பருப்புக் கீரை, உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் கைகால் எரிச்சல் குணமாகும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227462
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய பாட்டி வைத்தியம் :- ~
« Reply #1 on: February 24, 2014, 04:00:43 PM »
எளிய பாட்டி வைத்தியம் :-




மந்தம்

புளிச்சக்கீரையை சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மந்தம் குணமாகும்.

பண்ணைக் கீரையுடன் சிறிது ஓமம் கலந்து அரைத்துச் சாப்பிட்டால் வயிறு மந்தம் தீரும்.

மரு

அகத்திக்கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை உதிர்ந்து விழுந்துவிடும்.

முகத்தில் உருவாகும் பரு, உடலில் உருவாகும் பாலுண்ணி போன்றவற்றுக்கு அம்மான் பச்சரிசி செடியில் இலையை ஒடிக்கும் போது வெளியாகும் பாலைத் தடவினால் மரு, பாலுண்ணியிலிருந்து குணம் பெறலாம். வாய்ப்புண், நாக்குப்புண், உதடு வெடிப்பு போன்றவற்றுக்கும் இந்தச் செடியின் பால் நல்ல பலன் தரும்.

ஜீரண மண்டல உறுப்புக்கள்

பண்ணைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரண மண்டல உறுப்புக்கள் பலம் பெறும்.

ஜீரண சக்தி

புளியாரைக் கீரைச் சாறில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

ஜீரண கோளாறு

சாணாக்கிக் கீரையுடன் சிறிது ஓமம், மஞ்சள் இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறுகள், வாயுக்கோளாறுகள் போன்றவை தீரும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227462
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய பாட்டி வைத்தியம் :- ~
« Reply #2 on: May 10, 2014, 09:12:14 AM »
எளிய பாட்டி வைத்தியம் :-




தீப்புண் ஆற

பருப்புக் கீரையை அரைத்து தீப்புண்கள் மீது தடவினால் விரைவில் புண்கள் ஆறும்.

தேள் கொட்டு

தேள் கொட்டினால் விஷம் ஏறும். கொட்டிய இடத்தில் கடுப்பு இருக்கும். வெற்றிலை இரண்டை எடுத்துப் பத்து மிளகை அதில் வைத்து மடித்து வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கினால் விஷம் இறங்கும். வலி நிற்கும் இது ஓர் உடனடி நிவாரணி.

தைராய்டு நோய்கள்

பசலைக் கீரைச் சாறு (100 மிலி) மற்றும் இஞ்சிச் சாறு (100 மிலி) ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.

தொண்டை

பிண்ணாக்குக் கீரை சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் நல்ல குரல் வளம் உண்டாகும். தொண்டையில் ஏற்படும் நோய்களும் குணமாகும்.

நரை

கரிசலாங்கண்ணி கீரைச் சாறில் நெல்லிமுள்ளி, சீரகம் இரண்டையும் சம அளவு ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இளநரை மறையும்.