Author Topic: ~ தர்பூசணி ஜூஸ் ~  (Read 454 times)

Online MysteRy

~ தர்பூசணி ஜூஸ் ~
« on: May 09, 2014, 01:46:15 PM »
தர்பூசணி ஜூஸ்



தேவையானவை:
தர்பூசணி சாறு - ஒரு கிளாஸ் (விதைகளை நீக்கி அதன் சதைப் பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டு ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்), எலுமிச்சை - ஒரு மூடி, புதினா - 5 இலைகள், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, தேன் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன், பச்சை கலர் ஃபுட் கலர் - சிறிதளவு, இஞ்சிச்சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை:
தர்பூசணி சாறுடன் எலுமிச்சைச் சாறு, இஞ்சிச்சாறு, தேன், நறுக்கிய புதினா இலைகள், ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு, ஒரு தட்டில் சர்க்கரையைப் பரப்பி அதில் பச்சை கலர் ஃபுட் கலரை சேர்த்துக் கிளறினால், சர்க்கரை பச்சை நிறத்தில் மாறிவிடும். இனி, ஜூஸ் கிளாஸை எடுத்து அதன் வாய்ப்பகுதியில் சிறிது தண்ணீர் தடவி, அப்படியே சர்க்கரை பரப்பிய தட்டில் கவிழ்த்து வைத்தால், கிளாஸின் வாய்ப்பகுதியில் பச்சை நிற சர்க்கரை ஒட்டிக் கொள்ளும். இந்த கிளாஸில் ரெடி செய்த ஜூஸை ஊற்றி, குழந்தைகளிடம் கொடுத்தால்  நிமிடத்தில் காலியாகிவிடும்.