என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 கப்,
கோதுமை மாவு - 1 கப்,
சூடாக்கிய வெண்ணெய் அல்லது நெய் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப, கருப்பு, வெள்ளை எள் (இரண்டும் கலந்தது) - 1/2 கப்,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மைதாவை வாய் அகலமான ஒரு பாத்திரத்தில் போட்டு, உருக்கிய நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, உப்புப் போட்டு பிரெட் தூள் மாதிரி கலக்கவும். கையில் பிடித்தால் உதிராமல் கொழுக்கட்டை மாதிரி சிறிது நேரம் உடையாமலும் இருக்க வேண்டும். இதுதான் பதம். அதை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைத்து, பிறகு சிறிது தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். அதை பூரியாகத் தேய்த்து அதன் மேல் 1 டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் தடவி, மைதா 1 டீஸ்பூன் தூவி, உருட்டி பூரிகளாகத் தேய்க்கவும். அது ஈரமாக இருக்கும் போதே கருப்பு, வெள்ளை எள் கலந்து, எள் கலவையை 1/2 டீஸ்பூன் அளவாக பூரியில் வைக்க வேண்டும். சிறிது அழுத்தி ஒட்ட வேண்டும். கடாயில் எண்ணெய் சூடாக்கி இந்த எள்ளு பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து, வடித்து வைத்துக் கொள்ளவும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதற்கு சைட் டிஷ்... இனிப்பு, புளிப்பு, கார சட்னி...வினிகர், உப்பு, தேன் - தேவையான அளவு, மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன், கலந்த பழங்கள் (வாழை, மாம்பழம், தர்பூசணி, பைனாப்பிள்) - 1/2 கப். பழக்கலவையை ஒன்று சேர்த்து, உப்பு, வினிகர், தேன் கலக்கவும். இதை அடுப்பில் வைத்து கொதித்ததும் மிளகாய் தூள் சேர்க்கவும். நன்கு கலந்து கெட்டியானதும் இறக்கி பூரியுடன் பரிமாறவும்.
இந்த பூரி 3 நாட்கள் வரை சுவை மாறாமல் இருக்கும்.